பக்கம்:மன ஊஞ்சல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 27 குறுநகை புரிந்துகொண்டு நின்றபோது அவனைப் பார்த்தால் எவ்வளவு அழகாக இருந்தது! ஆண்மையின் அழகே உருவெடுத்து வந்து அங்கே சிரித்துக் கொண்டு நிற்பதுபோலிருந்தது. அவனிடமிருந்த ஊனமும் ஈனமும் தெரியாத பேர்களுக்கு அவன் ஒர் அழகரசன் போலவே தோன்றுவான் என்பதில் ஐயமில்லை. ஆனால், அவனையும் அவன் உடலமைப்பையும், அவன் மனநிலைமையையும் நன்கு அறிந்து கொண்டிருந்த தங்கத்திற்கு எப்படியிருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. . அவள் அவன் ஒர் அங்கவீனன் என்பதற்காகவோ, அரைப் பைத்தியம் என்பதற்காகவோ அவன் மீது அரு வெறுப்புக் கொள்ளவில்லை. ஆனால், அவன் தனக்குப் பார்க்கப்பட்ட மாப்பிள்ளை என்பதை நினைத்துப் பார்க்கும் போதுதான் அவளுக்கு மனச் சங்கடமாயிருந்தது. ஒரு முறை அவனைப் பார்த்தால், அவளுக்கு இரக்மாக யிருந்தது. இன்னொரு முறை அவனைப் பார்த்தால். தன் நிலையை எண்ணி அவள் அஞ்சித் துடிக்க வேண்டியிருந்தது 'நீங்கள் எதற்காக இங்கு வந்தீர்கள்?’ என்றுகேட்டாள் தங்கம். 'தங்கம்! நீ மிகமிக நல்லவள். நீ யொருத்திதான் என்னை மரியாதையாக அழைத்துப் பேசுகிறாய். உன்னை எனக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. ஏன் தங்கம், நீ எப்போதும் என்னிடம் மரியாதையாக நடந்து கொள் வாயா!' என்று கேட்டான் அந்த வெகுளி. 'ஏன்? உங்களை யார் அவமான்ப்படுத்துகிறார்கள்?’’ "அதை ஏன் கேட்கிறாய் தங்கம்? இந்த ஊர்ப் பெண் பிள்ளைகள் யாருமே என்னை இப்படி மரியாதையாக அழைப்பதில்லை. சின்னச்சின்னப் பெண்களெல்லாம் கூட என்னை எப்படிப் பேசுகின்றன தெரியுமா? அவன் இவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/37&oldid=854489" இலிருந்து மீள்விக்கப்பட்டது