பக்கம்:மன ஊஞ்சல்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மன ஊஞ்சல் அடே கிடே என்று கூடப் பேசுவதில்லை தங்கம். ஏ, ஊய் என்றுதான் என்னை அழைப்பார்கள். என் பெயர் நடராசன் ஆனால் இந்தப் பெண் பிள்ளைகள் ஒற்றைக் கையன் என்று கூப்பிடுகிறார்கள். நீயே சொல்லு தங்கம், எனக்குக்கோபம் வருமா? வராதா? கோபத்தோடு அவர்களை அடிக்கப் போனால், 'அடியே பைத்தியம் ஓடி வருகுதடி என்று சொல்லிக்கொண்டே கிண்டல் செய்துவிட்டு ஓடிவிடுகிறார் கள். நான் பைத்தியம்தானா? நீயே சொல்லு தங்கம்' என்று பரிதாபமாகக் கேட்டான் நடராசன். "தங்கம், நீயே, சொல்லு, நான் பைத்தியம்தானா?” 'இல்லையே, யார் சொன்னா அப்படி?” 'கமலம் சொல்லுகிறாள்; சுசீலா சொல்கிறாள்; ருக்கு சொல்கிறாள்; இன்னும் எல்லாப் பெண்களுமே சொல்கிறார் கள் தங்கம். எனக்கு ஒற்றைக்கையில்லையாம்; அத்தோடு மூளையும் அடியோடு இல்லையாம். அதனாலே ஒரு பெண் கூட என்னைக் கலியாணம் செய்து கொள்ளமாட்டாளாம். ஏன் தங்கம். நீயும் அவர்கள் மாதிரி தானா? என்னைக் கலியாணம் செய்துகொள்ள மாட்டாயா?’’ தங்கம் எதுவும் பதில் சொல்லவில்லை. 'ஏன் தங்கம், பேச மாட்டேன் என்கிறாய். நான் சம்பாதித்துச் சோறு போடமாட்டேனா? அதைப்பற்றிக் கவலைப்படாதே தங்கம். உனக்கு என்னென்ன வேண்டுமோ சொல். அவ்வளவும் கொண்டுவந்து குவிக்கிறேன். இந்த ஒற்றைக் கை இருக்கிற வரையிலே உனக்கு நான் உழைத்துச் சம்பாதித்துப் போடாமல் இருக்கவே மாட்டேன். அதிலே மட்டும் நீ கொஞ்சங் கூடச் சந்தேகப்பட வேண்டாம்.' என்று ஏதாதோ பேசிக் கொண்டிருந்தான் நடராசன். தங்கம் அவற்றை மனத்திலே வாங்கிக் கொள்ளவில்லை அப்போது யாரோ தோட்டத்திற்குள் நுழைந்து வருவதைக் கண்ட தங்கம் அந்தத் திசையில் தன் கவனத்தைத் திருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/38&oldid=854490" இலிருந்து மீள்விக்கப்பட்டது