பக்கம்:மன ஊஞ்சல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 29 பினாள் ஒரு நவநாகரிக இளைஞன்வந்து கொண்டிருந்தான். காலில் பூட்சு, சில்க் சட்டை, புல் பாண்ட், கிராப்புத் தலை, நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் படியாக வழவழப்பாக வழிக்கப்பட்ட முகம் ஆகிய இவற்றுடன் அவர்களை நெருங்கி வந்த அந்த வாலிபன், தங்கத்தை நோக்கினான். தங்கம் அவனை வியப்புடன் நோக்கினாள். அவனை முன்பு எங்கோ பார்த்த மாதிரியாக இருந்தது. ஆனால் எங்கென்று நினைவு வரவில்லை. அவன் யார் என்றும் அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. "தங்கம் என்னைத் தெரியவில்லையா?” என்று அவன் கேட்டான். குரல்கூட எங்கோகேட்ட மாதிரியாக இருந்தது. ஆனால் தங்கத்தின் நினைவுக்கு அது எட்டி வரவில்லை. "நீங்கள் யார்? நீங்கள் யார்?' என்று அவள் சொல்லி முடிக்க முடியாமல் திண்டாடினாள். - "என்ன தங்கம்? அதற்குள் மறந்து விட்டாய்! நான் தான் சுந்தரேசன்!' என்றான் அந்த நவ நாகரிக வாலிபன், இதைக் கேட்டதும் அத்தான்!” என்று ஆனந்தத் தோடு கூவிய தங்கம், அடுத்த வினாடியே தான் ஒரு பருவப் பெண் என்பதை நினைத்துக் கொண்டவள் போல, வெட்கித் தலைகுனிந்து கொண்டாள். 'இதென்ன வெட்கம்? இங்கே வா தங்கம்! என்று அவள் தோளைத் தொட்டுத் தள்ளித் தன்னோடு நடந்து வரச் செய்தான் அந்த இளைஞன். - "அத்தான், ஏது இப்படித் திடீரென்று இந்த ஏழைகள் வீட்டுப் பக்கம்? அப்பாவைப் பார்த்து விட்டீர்களா?” என்று கேட்டாள் தங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/39&oldid=854491" இலிருந்து மீள்விக்கப்பட்டது