பக்கம்:மன ஊஞ்சல்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 மன ஊஞ்சல் 'மாமாவை இன்னும் பார்க்கவில்லை. வீதி வழியாக வரும் போதே உன்னைப் பார்த்தேன் அப்படியே தோட்டத் திற்குள் வந்துவிட்டேன். உன்னைப் பார்த்து விட்டு அப்புறம் அத்தையையும் மாமாவையும் பார்க்கலாம் என்று நினைத் தேன்." "சரி, வாருங்கள், வீட்டுக்குப் போகலாம்!” என்று அவனை அழைத்துக் கொண்டு தங்கம் வீட்டுக்குள்ளே நுழைந்தாள். அவள் தன்னிடம் பதில் எதுவும் பேசாமல் போய் விட்டதை எண்ணி வருந்தி அங்கேயே நின்று கொண்டிருந்தான் நடராசன் என்ற அந்த ஒற்றைக் கையிழந்த இளைஞன். வீட்டினுள்ளே தங்கத்தோடு நுழைந்த இளைஞனைக் கந்தசாமி வாத்தியாரும் மரகத அம்மாளும் உடனடியாக அடையாளம் புரிந்து கொள்ளவில்லை. தங்கந்தான் அறி முகப்படுத்தி வைத்தாள். 'அம்மா! அதிசயத்தைப் பார்த்தாயோ? பெரிய சீமான் ஒருவர் இந்த ஏழைகளின் வீட்டைத் தேடி வந்திருக்கிறார்!’ என்று குறும்புத்தனமாகக் கூறினாள் தங்கம். மரகத அம்மா அவள் சொல்லுவது என்ன என்று புரியாமல் திண்டாடினாள். "என்னம்மா விழிக்கிறீர்கள்? இது யார் தெரியுமா? சுந்தரேச அத்தான்!' என்று தங்கம் சொன்னவுடனே மரகத அம்மாள் ஒடி வந்து அவனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். தன் அண்ணன் மகனைக் கண்டதில் அவளுக்கு அத்தனை ஆனந்தம். 'தம்பீ! நீ இங்கு வந்தது தெரிந்தால் உன் அம்மா மிகவும் வருத்தப்படுவாளே! என்று கந்தசாமி வாத்தியார் கூறினார். இரண்டு குடும்பங்களுக்கு இடையே நிரந்தரமான பிளவை ஏற்படுத்தியவள் சுந்தரேசனின் தாய் என்பதை அவர் நன்றாக நினைவு வைத்திருந்தார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/40&oldid=854493" இலிருந்து மீள்விக்கப்பட்டது