பக்கம்:மன ஊஞ்சல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 31 'அதெல்லாம் அம்மா இப்போ ஒன்றும் சொல்ல மாட்டாள். அவள் தான் என்ன செய்தாலும் கோபப்படவே மாட்டாள்’ என்றான் சுந்தரேசன். “ஏண்டா, சுந்தரேசம்! உன் கல்யாணத்திற்குத் தான் நாங்கள் வரக் கொடுத்து வைக்கவில்லை. உன் மனைவி எப்படியிருக்கிறாள். குழந்தை குட்டிகள் ஏதாவது?’ என்று விசாரித்தாள் மரகத அம்மாள். 'குழந்தையாவது குட்டியாவது! அவள் தான் ஆறு மாதம்கூட இருக்கவில்லையே! என்று துயரக் குறியை முகத்தில் வரவழைத்துக் கொண்டு கூறினான் சுந்தரேசன். ‘ஏண்டா, உன் அம்மா அடித்து விரட்டிவிட்டாளா?' "போ அத்தை! எப்போதும் உனக்கு அம்மாவைப் பிடிக்காது. அவள் இந்த உலகத்தை விட்டே போய் விட்டாள் என்றால்.’’ என்று மேலும் வருந்துபவன் போல் கூறினான் சுந்தரேசன், "ஐயோ பாவம்' என்று வருத்தப்பட்டாள் மரகத அம்மாள். . சுந்தரேசன் மரகத அம்மாளின் அண்ணன் மகன். அவளுடைய அண்ணன் கயிலாயத்திற்கு இரண்டு மனைவிகள். இளையவளின் கொடுமை தாங்கமாட்டாமல் மூத்தவள் தன் குழந்தையோடு கிணற்றில் விழுந்து இறந்து விட்டதாகக் கேள்வி. இளையாளின் மகன் சுந்தரேசன். இளையவளான சுந்தரேனின் தாய் பெயர் குணவதி. பெயருக்குமாறுபாடான இயல்புடையவள் அவள். யாரோடும் அவள் ஒற்றுமையாக இருந்ததில்லை. அவளால் தான் மரகதமும் தன் அண்ண னுடன் ஒற்றுமையாக இருக்க முடியவில்லை. அவளுடைய கொடுமை தாங்காமலே, கயிலாயமும் திடீரென்று எங்கோ மறைந்து போய்விட்டார். 'மனைவி சற்றேனும் ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்." என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/41&oldid=854494" இலிருந்து மீள்விக்கப்பட்டது