பக்கம்:மன ஊஞ்சல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மன ஊஞ்சல் பழமொழி வாக்கியத்தின்படி அவர் சாமியாராய்ப் போய் விட்டதாய்ப் பேசிக்கொண்டார்கள். இப்படி நெடுநாளாகத் தங்களோடு ஒற்றுமையில்லா திருந்த குணவதியின் மகன் சுந்தரேசன் தங்கள் வீட்டுக்குத் திடீரென்று வந்திருப்பது கந்தசாமி வாத்தியாருக்கும் மரகத அம்மாளுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஆனால், மரகத அம்மாள் அவனைத் தன் அண்ணன் மகன் என்ற கண் ணோடேயே நோக்கினாள். ஆகையால், ஆச்சரியத்தையும் சந்தேகத்தையும் காட்டிலும்; அன்புடைமையே அவள் உள்ளத்தில் ஓங்கியிருந்தது. கந்தசாமி வாத்தியாரும் பகைமைகளை மறந்துவிடும் பண்புடையவர். ஆகவே சுந்தரேசனுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது அவர்கள் வீட்டிலே. சுந்தரேசனோடு பேசிக் கொண்டே இருந்ததில் குடும்ப நல விசாரணைகள், பழஞ் சேதிகள், இடைக்காலத்திய நடப்புகள் ஆகியவற்றை விசாரித்துக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. கடைசியில் சாப்பாட்டு நேரம் வந்து விட்டது. அப்போது தான் அவர்களுக்கு அண்ணாமலைப் பண்டிதரின் நினைவு வந்தது. “பண்டிதர் எங்கே காணவில்லை?’ என்று விசாரித்தார் கந்தசாமி வாத்தியார். "சாயுங்காலம் தோட்டத்தின் பக்கமாக உலவி வருவ தாகப் போனார். தங்கம், போய்ப் பெரியவரை அழைத்துவா" என்றாள் மரகத அம்மா. நான் சாயுங்காலம் தோட்டத்திற்குத் தானே போயிருந்தேன். அவர் வரக் காணவில்லையே!' என்றாள் தங்கம். “இல்லை அங்கே தான் போவதாகச் சொன்னார். போய்ப் பார்த்து விட்டு வா' என்றாள் மரகதம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/42&oldid=854495" இலிருந்து மீள்விக்கப்பட்டது