பக்கம்:மன ஊஞ்சல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 33 தங்கம் தோட்டத்திற்குள் காலடி எடுத்து வைத்தாள். மல்லிகைப் பந்தலின் கீழிருந்து எழுந்த இரண்டு உருவங்களை அவள் கண்டாள். இருட்டில் உருவங்கள் யார் என்று சரியாகக் கவனிக்க முடியவில்லை. அந்த உருவங்களில் ஒன்று தோட்டத்திலிருந்து நேரே விதிப்பக்கம் செல்லும் கதவை நோக்கி நடந்தது; இன்னொன்று வீட்டை நோக்கி நடந்து வேந்தது. அருகில் வந்ததும் வீட்டை நோக்கி வந்த உருவம் அண்ணாமலைப் பண்டிதர் தான் என்பதை அறிந்து கொள்ள முடிந்தது ஆனால் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றது யார் என்பது தெரியவில்லை. "அது யாராயிருக்கும்? என்று தங்கம் ஒரு கணம் யோசித்தாள். ஆனால், அதையே சுற்றிச் சுற்றி அவள் எண்ணம் வட்டமிடவில்லை. ஏனெனில், பிறர்விஷயங் களில் தலையிட்டுத் துருவிப்பார்க்கும் வழக்கம் தங்கத்திற்குக் கிடையாது. ஆகவே பிறகு அதைப் பற்றியே அவள் மறந்து விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும். சாப்பாட்டிற்காக உட்கார்ந்த போது, முதன் முதலாகச் சந்தித்த அண்ணாமலைப் பண்டிதரும் சுந்தரேசனும் வினாடி நேரம் ஒருவரையொருவர் உற்று நோக்கிக் கொண்டார்கள். அந்தப் பார்வைகளின் சந்திப்பில், ஏதோ வெறுப்பும் அருவருப்பும் கலந்திருந்ததை மற்றவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை. 3سسه uo

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/43&oldid=854496" இலிருந்து மீள்விக்கப்பட்டது