பக்கம்:மன ஊஞ்சல்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பைத்தியத்திற்குப் பண்டிதர் பரிவு அண்ணாமலைப் பண்டிதரைத் தங்கம் சாப்பிடக் கூப்பிடு வதற்காகத் தோட்டத்திற்குள் துழைந்த போது மல்லிகைப் பந்தலிலிருந்து கிளம்பிச் சென்ற மற்றோர் உருவம் வேறு யாருமல்ல, ஒரு கை முடவனான அரைப் பைத்தியம் நடராசன் தான். நடராசனோடு தான் அண்ணாமலைப் பண்டிதர் அவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருந்தார். - அண்ணாமலைப் பண்டிதர் அதற்கு முன் அந்த நடராசனைப் பார்த்ததில்லை. தற்செயலாக அன்று தோட்டத்திற்குள் சிறிது காலார உலவிவிட்டு வரலாமென்று புறப்பட்டவர் அங்கே தங்கம் ஒர் இளைஞனோடு பேசிக் கொண்டிருப்பதைக் காண நேரிட்டது. தங்கத்தின் குணம் அவருக்குத் தெரியும். தங்கத்திடம் அவர் கோபமாகவும் குரூரமாகவும் நடந்து கொண்டு வந்தார் என்றாலும், அவளை எடை போட்டு மதித்து வைத்திருந் தார். ஆனாலும் இளைஞன் ஒருவனோடு அவள் பேசிக் கொண்டு நிற்பதைக் கண்டதும் அவருடைய உள்ளம் துணுக் கென்றிருந்தது. தங்கம் மனமாகாத இளமைப் பருவத்தினள். அவள் ஓர் இளைஞனோடு பேசிக்கொண்டு நிற்பதென்றால் காண்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/44&oldid=854497" இலிருந்து மீள்விக்கப்பட்டது