பக்கம்:மன ஊஞ்சல்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 35 அது காதல் காட்சியாகத்தானே தோன்றும். காதல் புரிவதிலே அண்ணாமலைப் பண்டிதருக்கு வெறுப்பில்லை. ஆனால் இந்தக் காலத்துக் காதலிலே அவருக்குப் பெரும் பாலும் நம்பிக்கையில்லை. இந்தக் காலத்திலே பெரும் பாலான காதல் விவகாரங்கள், பெண்களின் சீர்குலைவுக்குத் தான் வழிவகுக்கின்றன என்பது அவருடைய கருத்து. இந்த வழியில் தங்கம் செல்லுவதாகத் தெரிந்தால் அவளைச் சீர்திருத்த வேண்டும் என்ற எண்ண்ம் அவருக்கு ஏற்பட்டது. எதற்கும் விவகாரத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு அதன் பிறகுதான் தங்கத்தை நயமாகவோ பயமாகவோ சொல்வித் திருத்த வேண்டுமென்று முடிவு செய்தார். அதனால் அவர் மெதுவாக, அவர்கள் அறியாத படி செடிகளின் மறைவிலே ஒளிந்து சென்று அந்த மல்லிகைப் பந்தலுக்குப் பின்னாலே மறைந்து அமர்ந்து கொண்டார். அப்போதுதான் நாம் முன்பு விவரித்த நிகழ்ச்சி நடந்தது. அரைப் பைத்தியம் நடராசன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி தங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்தான். ஆனால், தங்கம் அவனிடம் எதுவும் பேசாமல், யாரோ, புதிதாகவந்த இளைஞனோடு அத்தான் என்று அழைத்த படி ஆனந்தமாகப் பேசிக் கொண்டு வீட்டுக்குளளே போய் விட்டாள். அவள் அத்தான் என்று அழைத்துப் பேசிய அந்த இளைஞனை யார் என்று தெரிந்து கொள்ள அண்ணாமலைப் பண்டிதர் ஆவல்கொண்டார். ஆனால், அரைப் பைத்தியம் நடராசன் மேல் அவருக்கு அனுதாபமோ அன்போ அல்லது இரண்டுமோ ஏற்பட்டு விட்டது. தன்னை அலட்சியப்படுத்தி விட்டு, நவநாகரிக உடையணிந்த ஓர் இளைஞனோடு தங்கம் போவதை வெறித்து நோக்கிக் கொண்டிருந்த அந்தப் பையன்மீது அவருக்கு அக்கறை ஏற்பட்டுவிட்டது. ஒளிந் திருந்த இடத்தை விட்டு வெளியில் வந்து, அவன் தோளைப் பற்றி, "தம்பீ!என்ன பார்த்துக்கொண்டு நிற்கிறாய்?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/45&oldid=854498" இலிருந்து மீள்விக்கப்பட்டது