பக்கம்:மன ஊஞ்சல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - மன ஊஞ்சல் 'ஐயா, நான் கையில்லாதவனாம்! மூளையில்லாதவ னாம் என்னை ஒரு பெண்கூடக் கலியாணம் செய்து கொள்ள மாட்டாளாம். தங்கம் நல்லவள். அவள் என்னிடம் அன்பாகப் பேசினாள் அவளாவது என்னைக் கல்யாணம், செய்து கொள்ளுவாள் என்று நம்பியிருந்தேன். ஆனால் இன்னொருவன் வந்து அவளை இழுத்துக் கொண்டு போய் விட்டானே! என்று தனக்கே உரிய முறையில் அவரிடம் வருத்தத்தோடு கூறினான் நடராசன். இதைக் கேட்ட அண்ணாமலைப் பண்டிதருக்கு இரண்டு கண்களிலிருந்தும் நீர் பொலபொலவென்று உதிர்த்தது. - "ஐயா! எனக்காக நீங்கள் அழவேண்டாம்.’’ என்று சொல்லி நெருங்கி வந்து அவருடைய தோள் துண்டை எடுத்து அவர் கண்களையும் கன்னத்தையும் துடைத்து விட்டான் நடராசன். - அண்ணாமலைப் பண்டிதர் அப்படியே அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். 'தம்பீ! நான் தங்கத்தைக் கேட்டுப் பார்க்கிறேன். முடிந்தால் அவள் உனக்கே கழுத்தை நீட்டும் படி செய்ய முயல்கிறேன். நீ அடிக்கடி இங்கு வந்து போய்க் கொண்டிரு' என்று நாத்தழுதழுக்கக் கூறினார். பிறகு அண்ணாமலைப் பண்டிதர் நடேசனின் வாழ்க்கை படிப்பு ஆகியவற்றைப் பற்றி விசாரித்தார்! பள்ளிக் கூடத்தில் அவன் ஆறுமாதம் சேர்ந்து படித்ததாகவும், அதன் பிறகு பைத்தியம் என்று சொல்லிப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பப்படாமல் இருந்துவிட்டதாகவும் கூறினான். இனிமேல் நீ தினமும் என்னிடம் வந்து படித்துக் கொள்கிறாயா? மற்றவர்கள் உன்னைப் பைத்தியம் என்று சொல்லாமல் புத்திசாலி என்று சொல்லும்படி செய்து விடுகிறேன்" என்று கேட்டார் பண்டிதர். "ஆகா! தினம் வருகிறேன்!” என்று ஒப்புக் கொண்டான் நடராசன். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/46&oldid=854499" இலிருந்து மீள்விக்கப்பட்டது