பக்கம்:மன ஊஞ்சல்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 37 பிறகு இருவரும் பிரித்து செல்வதற்காக எழுந்த போது தான் தங்கம் அவரைச் சாப்பாட்டுக்குக் கூப்பிட வந்தாள். சாப்பாட்டிற்காக இலையின்முன் உட்காரும் போது தான் தங்கத்தோடு வந்த இளைஞன் யார் என்று பார்ப் பதற்காக அவர் அவனைக் கூர்ந்து நோக்கினார். அவனும் அவரைக் கூர்ந்து நோக்கினான். வினாடி நேரத்திற்குப் பிறகு அவர்கள் பார்வையை மாற்றிக் கொண்டு விட்டார்கள். சாப்பிடும் பொழுதே, சுந்தரேசனை அண்ணாமலைப் பண்டிதருக்குக் கந்தசாமி வாத்தியார் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் சொன்னதையெல்லாம் கேட்டுக் கொண்டாரே தவிர, அண்ணாமலைப் பண்டிதர் எதுவும் பதில் சொல்லவில்லை. சுந்தரேசனும் அவரிடம் எதையோ தேடுபவன்போல் அவரை உற்று நோக்கினான். ஆனால் தேடுவது அவரிடம் இல்லையென்று தெரிந்து கொண்டாற் போல் பிறகு அவரைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இருந்துவிட்டான். மறுநாள் காலையில் விடிந்ததும் விடியாததுமாக முருகேச வாத்தியார். கந்தசாமி வாத்தியார் வீட்டுக்கு ஓடி வந்தார். கந்தசாமி வாத்தியார் அவரை விஷயம் என்ன வென்று விசாரித்தார். அவர் அண்ணாமலைப் பண்டிதரைப் பார்க்க வேண்டுமென்று சொன்னவுடன், அவர் அறைக்கு அழைத்துச் சென்றார். "ஐயா, நீங்கள் என் மகனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுப்பதாகச் சொன்னீர்களாம். அரைப் பைத்தியமாயிருக் கிறான்; அவன் எங்கே படிக்கப் போகிறான் என்று நாங்கள் அவனைக் காலாடியாகத் திரியும்படி விட்டுவிட்டோம். ஆனால் உங்களைப் போன்ற மேதைகள் நினைத்ததைச் செய்து முடித்து விடுவீர்கள். ஆனால் நான் சொல்ல வந்த விஷயம் இதுவல்ல. நீங்கள் என் மகனை இங்கே வந்து படித்துக் கொண்டு போகச் சொன்னீர்களாம், உங்கள்ைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/47&oldid=854500" இலிருந்து மீள்விக்கப்பட்டது