பக்கம்:மன ஊஞ்சல்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மன ஊஞ்சல் போன்ற பெரியவர்களுடைய கண்காணிப்பில் இருக்கக் கிடைத்தது அவன் பாக்கியமே. ஆனாலும் ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் தயவு செய்து எங்கள் வீட்டில் கொஞ்ச நாள் தங்கியிருக்க வேண்டும். இதைக் கேட்டுக் கொள்ளத்தான் நான் இங்கே ஓடி வந்தேன். சற்று முன் தான் நடராசன் என்னிடம் இச்செய்தியைக் சொன்னான் என்றார் முருகேசவாத்தியார். அண்ணாமலைப் பண்டிதர் ஏதோ யோசித்துக் கொண் டிருப்பது போல் ட்கார்ந்திருந்தார். அவருடைய வாயி லிருந்து என்ன வரப்போகிறதென்று முருகேச வாத்தியார் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். 'முருகேசரே! பெரியவர் இங்கேயே இருக்கட்டும். உமது பிள்ளைக்குப் பாடம் சொல்லித் தர வேண்டுமென்பதற்காக அவர் அங்கே வர வேண்டுமென்பதில்லை, எனக்கென்னவோ பண்டிதரைப் பிரிந்திருப்பதென்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. உமது மகனே இங்கு வந்து படித்துக் கொண்டு போகட்டும்' என்று கந்தசாமி வாத்தியார் கூறினார். 'அதற்குச் சொல்லவில்லை, நான் எல்லாவற்றையும் யோசித்துத்தான் இந்த முடிவுக்கு வந்தேன். கந்தசாமி, உன் மகள் வயது வந்தவள். என் மகன்ோ பித்துக்கொளி, அவன் அடிக்கடி இங்கேவந்தால் ஊர் வாய் சும்மாயிருக்காது. நாளைக்குக் கலியாணமாக வேண்டிய பெண். அதையும் நினைத்துப் பார்க்க வேண்டுமல்லவா?’ என்று முதல் நாள் மாலை நடராசன் மல்லிகைப் பந்தலருகில் தங்கத்துடன் பேசிக் கொண்டிருந்த விவரத்தை வெளியிட்டார், முருகேசி வாத்தியார். கந்தசாமி வாத்தியாருக்கு அவர் சொல்வது சரி யென்றே தோன்றியது. ஆனால், பாண்டிதரைத் தன் வீட்டை விட்டு அனுப்பவும் அவருக்கு மனமில்லை. ஒருவித

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/48&oldid=854501" இலிருந்து மீள்விக்கப்பட்டது