பக்கம்:மன ஊஞ்சல்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 39 மான முடிவுமில்லாத இரண்டுங்கெட்டான் தன்மையான உணர்ச்சியோடு அவர் பண்டிதரை நோக்கினார். 'நீங்கள் எந்த விஷயத்தைக் குறித்தும் கவலைப்பட வேண்டாம். நடராசனுக்கு இங்கே யிருந்து கொண்டு கல்வி கற்றுத் தரப்போவதில்லை. அதற்காக முருகேசர் வீட்டுக் கும் போய் விடப்போவதில்லை' என்றார் அண்ணாமலைப் பண்டிதர். இரண்டு வாத்தியார்களும் அவர் சொல்லுவதன் பொருள் விளங்காமல் விழித்துக் கொண்டிருந்தார்கள். 'அப்படியானால், எங்கேயிருந்து கற்றுத்தரப் போகிறீர் கள்' என்று கேட்டார் முருகேச வாத்தியார். 'கதலிப் பட்டணத்தில்' என்று பண்டிதரின் வாயிலி ருந்து பட்டென்று பதில் வந்தது. காதலன் பிரியப்போகும் செய்தியறிந்த காதலியின் மன நிலைதான் அப்போது கந்தசாமி வாத்தியாருக்கிருந்தது. பெரியவரைப் பிரிவது, எதையோ இழப்பது போலிருந்தது அவருக்கு. ஆனால் அடுத்தாற்போல் பெரியவரின் வாயிலி ருந்து வந்த வார்த்தைகள் அவர் உள்ளத்தில் தேன் பாய்ச்சின. “காலையில் கதலிப் பட்டணத்திற்கு நடராசனை அழைத்துக் கொண்டு செல்வேன். மத்தியானச் சாப்பாட்டுக் குத் திரும்பி வந்து விடுவேன்' என்றார் அண்ணாமலைப் பண்டிதர். 'அதற்குத் தகுந்தாற்போல் கார் வசதி கிடையாதே!' என்று இழுத்தார் கந்தாமி. - 'மாட்டு வண்டி?” என்று பண்டிதர் கேட்டார். "ஓ! அது எத்தனையோ கிடைக்கும் நான் ஏற்பாடு செய் கிறேன்!” என்றார் முருசேகர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/49&oldid=854502" இலிருந்து மீள்விக்கப்பட்டது