பக்கம்:மன ஊஞ்சல்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் "தென்றல்’ இதழில் பணிபுரிந்த போது, அதன் உரிமையாளராகிய திரு ஆ. நட ராசன் அவர்கள் ஒரு தொடர் கதை எழுதுமாறு கேட்டார் கள். தென்றல் ஆசிரியர் கவிஞர் கண்ணதாசனும் கேட்டுக் கொண்ட பின், எழுத முயன்றேன். வெள்ளிக் கிழமை தோறும் வெளிவரும் தென்றலுக்கு, வியாழக்கிழமைக்குமுன் எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், புதன் கிழமை வரை என்ன ::-N முயன்றாலும் எழுத முடிவதில்லை. கற் பனே பிறப்பதில்லை. எழுதும் மனநிலை அமைவதில்லை. வியாழக்கிழமை அச்சுக்கோப்பவர் கள் வேலையின்றிச் சும்மா நிற்கிறார்கள் என்ற நிலையில் அவர்களின் மேலாளர் வந்து வேறு ஏதாவது கதை கட்டுரைகள் இருந்தால் எடுத்துக் கொடுங்கள் என்று கேட்ட பின், அரைமணிநேரம் பொறுங் கள்’ என்று கூறிச் சென்ற வாரத்துக் சிறுசிறு தாள்களில் பேனா ஒடிக் கொண்டேயிருக்க பத்துப் பத்து வரிகள் அடங்கிய தாள்களை அச்சுக் கோப்பவர் எடுத்துச் சென்று கொண்டே யிருக்க, கதை வளர்ந்து கொண்டேயிருக்கும். போதும் என்று.மேலாளர் வந்து சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/5&oldid=854503" இலிருந்து மீள்விக்கப்பட்டது