பக்கம்:மன ஊஞ்சல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 மன ஊஞ்சல் 'அதெல்லா நீங்கள் யாரும் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டாம்' என்று பண்டிதர் சொன்னார். பண்டிதரின் போக்கே அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியது. முதலாவதாக யாரும் அக்கறை காட்டாத நடராசன் மீது அவருக்கு அக்கறையும் அனுதாபமும் ஏற் பட்டது; இரண்டாவதாகக் கல்வி கற்றுத் தருவதற்கு அவர் கதவிப்பட்டணத்தைத் தேர்ந்தெடுத்தது; மூன்றாவதாக அதற்கு எவ்வித ஏற்பாடும் செய்ய வேண்டாமென்று சொன் னது எல்லாம் சேர்ந்து அவர்களை ஆச்சரியப்படச் செய்தது. அவர் ஒரு விந்தை மனிதராக மட்டுமல்லாமல் மர்ம மனித ராகவும் தோன்றினார். கந்தசாமி வாத்தியார் எந்த விஷயத்தையும் ஆழ்ந்து துணுகிப் பார்ப்பதில்லை. ஆனால் முருகேச வாத்தியார் எந்த விஷயத்தையும் விசித்திரமாகச் சிந்தித்துப் பார்ப்பார். அவருக்கு அண்ணாமலைப் பண்டிதரிடம் ஏதோ ஒரு சக்தி யிருக்கிறதென்று தோன்றியது. தன்னைப் பார்த்தவர்களை யெல்லாம் வசப்படுத்தி விடுகிறார். தன் பேச்சைக் கேட்டவர்களையெல்லாம் தான் சொல்லுவது சரியென்று எண்ணச் செய்துவிடுகிறார். இப் போது பைத்தியமாக உள்ள பையனுக்குக் கல்வி போதிப்ப தாகச் சொல்லுகிறார். அதற்கு வண்டி ஏற்பாடும் தானே கவனித்துக் கொள்வதாகச் சொல்லுகிறார். இவ்வளவும் செய்யவல்ல இவரிடம் ஏதோ "சித்து இருக்கிறதென்று முடிவு கட்டினார் முருகேசர். இந்த முடிவுக்கு வந்தபிறகு அவர் பண்டிதரிடம் மேலும் பயபக்தியுடையவரானார். அவர்கள் மூவருடைய பேச்சும் முடிவுக் கட்டத்தை யடைந்தவுடன் முருகேசர் விடைபெற்றுக் கொண்டு தன் வீட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/50&oldid=854504" இலிருந்து மீள்விக்கப்பட்டது