பக்கம்:மன ஊஞ்சல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 4t டிற்குச் சென்றார். கந்தசாமி வாத்தியார் பள்ளிப்பிள்ளை களின் நோட்டுப் புத்தகங்களைத் திருத்தப் போனார். அண்ணாமலைப் பண்டிதர் திருக்குறள் படிக்கத் தொடங் størrrrr, - மறுநாள் காலை ஒன்பது மணியடித்தது. கந்தசாமி வாத்தியார் பள்ளிக்கூடத்திற்குப் புறப்படத் தயாரானார். 'கந்தசாமி, இதோ நானும் வருகிறேன்!' என்று பண்டிதரின் அறையிலிருந்துகுரல்கேட்டது. கந்தசாமி நின்றார். பண்டிதர் புன்சிரிப்போடு நடந்து வந்தார். "சரி வா போகலாம்!' என்று சொன்னவுடன், கந்தசாமியும் அவரைப் பின் தொடர்ந்தார். -- இருவரும் வாசலுக்குவருவதற்கும். அழகான இரட்டைமாட்டு வில்வண்டியொன்று அங்கே வந்து நிற்பதற்கும் சரி யாக இருந்தது. 'கந்தசாமி ஏறிக்கொள்! உன்னைப்பள்ளிக் கூடத்தில் விட்டுவிட்டுப் போகிறேன்!” என்றார் பண்டிதர். வண்டியையும், வண்டியோட்டும் ஆளையும் பார்த்து வாத்தியார் பிரமித்துப் போனார், வண்டி கதலிப்பட்டணம் ஜமீந்தார் கருணாகரருடையது, அதை யோட்டி வந்தவன் வேறு யாருமில்லை; அரைப் பைத்தியமான ஒற்றைக் கை நடராசன்தான். அண்ணாமலைப் பண்டிதர் வண்டியில் ஏறி உட்கார்த்து கொண்டு, கந்தசாமி வாத்தியாரையும் ஏறிக் கொள்ளச் சொன்னார். வாத்தியார் பின்புறத்தில் உட்கார்ந்தார். அப்போது சன்னல் வழியாக மரகத அம்மாளும் தங்கமும் இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வண்டியின் முன்பக்கத்தில் பண்டிதரின் மு. க மு. ம் நடராசனின் முகமும் அடுத்தடுத்துத் தெரிந்தன. அவர்கள் இருவரையும் ஒன்றாகப் பார்த்த தங்கத்துக்கு, ஏதாவது உவமானமாகச் சொல்ல வேண்டும் போலிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/51&oldid=854505" இலிருந்து மீள்விக்கப்பட்டது