பக்கம்:மன ஊஞ்சல்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

to for ஊஞ்சல் 6. திருட்டுப்போன திருவாசகம் தங்கத்திற்கு அத்தான் சுந்தரேசனைக் கண்டதும் ஏற்பட்ட ஆனந்தத்திற்கு அளவேயில்லை. சின்ன வயதில் அவனோடு தான் கூ டி யோ டி விளையாடியதெல்லாம் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவன் செய்த போக்கிரித் தனங்களும், தன்னை அழ அழச்செய்து வேடிக்கை பார்த்துச் சிரித்ததுவும், தன்னைத் தலையில் குட்டி விட்டு மாமியிடம் போய்த் தாள் அவனைக் கிள்ளிவிட்டதாகக்கோள் சொல்லிச் சண்டை மூட்டி விட்டதும் எல்லாம் மணக்கண் முன் தோன்றின. ஆனால் அத்தான் எவ்வளவு தூரம் மாறிவிட் டார் என்று யோசித்தபோது அவளுக்கு ஆச்சரியம் மேலிட்டது, . போட்ட சட்டையைப் புழுதியாக்கிப் பீத்தலாக்கிப் பார்ப்பதற்கு அழுக்குக் களஞ்சியமாய் மூக்கு வழிய வழிய நிற்கும் அந்த அத்தான் இப்போது எவ்வளவு அழகாக, ஸ்டைலாக, டீக்காக நவநாகரிகமே உருவெடுத்து வந்தது போல் இருக்கிறார்! தன்னை வம்பிழுப்பதே வேலையாக இருந்தவர் இன்று எவ்வளவு மேன்மையான இன்ப மொழிகள் பேசும் இயல்புடையவராகி விட்டார்: உருவத்திலும்; நாகரி கத்திலும் பண்பிலும் இடைப்பட்ட நாட்கள் அவரை எவ் வளவு தூரம் மாறிவிட்டன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/53&oldid=854507" இலிருந்து மீள்விக்கப்பட்டது