பக்கம்:மன ஊஞ்சல்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 மன ஊஞ்சல் நெடுநாளைக்குப் பிறகு அத்தானை முதன் முதலாகப் பார்த்தவுடனேயே அவள் ஏதோ ஒருவிதமான கவர்ச்சிக்கு ஆட்பட்டவளானாள். ‘அத்தான் அத்தான் என்று அவன் பின்னேயே சுற்றித் சுற்றித் திரியலானாள். சுந்தரேசன் சிறுபிள்ளையில் முரடணாயிருந்தான் என்றால் இப்போது கைகாரனாக வளர்ந்து விட்டான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் பார்த்தவுடனேயே தங்கத்தைக் கணக்கிட்டு விட்டான். பதின்மூன்று ஆண்டு களாகப் பருவக் குறுகுறுப்புடன் தவித்துக் கொண்டிருக்கும் ஒர் இளங்கன்னியான அவள் தன் வசீகரமான பார்வையொன் றுக்கே அடிமையாகி விடுவாள் என்று அவன் நன்றாகப் புரிந்து கொண்டான். தான் வாய்விட்டு அவளைக் கேட் காமலேயே அவள் தனக்குச் சரணாகதியடைய வேண்டு மென்று அவன் எதிர்பார்த்தான். அவ்வாறு காதல் சரணா கதியடைவாள் தங்கம் என்பதிலே அவனுக்கு அசையாத நம்பிக்கையும் இருந்தது. அ ந் த ப் பேதைப் பெண்ணும் அவனைக் கண்டதுமுதல் அவனையே எண்ணி எண்ணிக் காலங்கழித்தாள். முதலில் த ங் க ம் சுந்தரேசன் மீது தன் காதலைச் செலுத்தப் பெரிதும் தயங்கினாள். அதற்குக் காரணம் அவன் மணமானவன் எ ன் ப ேத! இன்னொருத்தியின் உடைமையான ஒருவனைத் தான் எண்ணுவதும் தவறு என்ற தமிழ் நாட்டுப் பெண் பண்பு அவளைத் தடுத்தாட்கொண் டது. ஆனால், சுந்தரேசன் தன் மனைவி யிறந்து போய் விட்டதாகச் சொல்லிய பிறகு தங்கத்தின் உள்ளம் அந்த காவியான இடத்தைத் தான் ஏன் ஆக்கிரமித்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணியது. ஆனால், சுந்தரேசன் நிலையை யும் அவள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டாள். சுந்தரேசன் தாயார் குணவதியம்மாளைப்பற்றி நினைக்கும்போது அவள் குலை நடுங்கக் கண்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/54&oldid=854508" இலிருந்து மீள்விக்கப்பட்டது