பக்கம்:மன ஊஞ்சல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 45. தானோ, திருமணச் செலவுக்கோ, சீர்வரிசை கொடுக் கவோ சக்தியற்ற நிலையில் உள்ள குடும்பத்தைச் சேர்ந் தவள். அத்தான் சுந்தரேசனோ பணக்காரர்; மாமா கைலாயம் சேர்த்துவைத்து பணத்திற்கெல்லாம் அதிபதி. அத்துடன் முதல் கலியாணத்தின் மூலம் வந்த வரும்படிவேறு சேர்ந்திருக்கும். அப்படிப்பட்ட உயர்ந்த நிலையில் உள்ளவர் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்பது சந்தேகமே. அவர் ஏற்றுக் கொண்டாலும் அவருடைய தாயார் குணவதியம் மாள் சீர்சிறப்பு இல்லாமல் மருமகளாக வரும் தன்னை ஏற்றுக் கொள்ளவே மாட்டாள் என்பது நிச்சயம். இதை யெல்லாம் நினைக்கும்போது அத்தானைக் காதவிக்காமல் இருப்பதே மேலென்று தோன்றியது. ஆனால், அந்த மனம்அது மட்டும் கட்டுப்படக் கூடியதாயில்லையே! சுந்தரேசன் திடீரென்று தங்கள் வீட்டுக்கு வந்த காரணம் என்னவென்று யாருக்கும் தெரியாது. அவன் நாட் கணக்காய் அங்கு தங்கியிருப்பதும் ஏனென்று தெரியாது. தங்கமோ அதைப் பற்றிச் சிந்திக்கவேயில்லை. அவளுக்கு எப்போதும் அத்தான் அருகிலேயே யிருக்க வேண்டும்போல் இருந்தது. மரகத அம்மாளுக்குத் தன் மருமகன் விஷயம் புரியாத புதிராக இருந்தபோதிலும், அவன் தன் வீட்டில் தங்கியிருப்பதை அவள் ப ா ர மா க நினைக்கவேயில்லை. கந்தசாமி வாத்தியாரோ இந்த மாதிரி விஷயங்களைக் கருது வதேயில்லை. ஆனால், குடும்பத்தின் வருவாயோ குறைவு. அதில், நிரந்தரமாக இரண்டு பேர் அதிகப்படியாக வந்து சேர்ந்தது பெருங் கவலையை உண்டாக்கி விட்டது. கந்தசாமி வாத்தியார் எங்கெங்கோ எப்படி எப்படியோ கடன் வாங்கிக் கொண்டு வந்து செலவுகளிலே தட்டுப்பாடு வராதபடி கவனித்துக் கொண்டார். வந்திருந்த விருந் தினர்கள் இரண்டு பேரும் தன் நிலையைத் தெரிந்து கொள்ளாதபடி நடந்துகொண்டார். தன் மனைவியிடமோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/55&oldid=854509" இலிருந்து மீள்விக்கப்பட்டது