பக்கம்:மன ஊஞ்சல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - மன ஊஞ்சல் மகளிடமோ கூட அவர் தம் பொருளாதாரக் கவலையை எடுத்துச் சொல்வது கிடையாது. எப்படியோ காலம் ஒடிக் கொண்டிருந்தது. தங்கம், தன் தாயாருக்கு வீட்டு வேலைகளில் உதவியாக இருப்பாள். அண்ணாமலைப் பண்டிதருக்குத் தேவையறிந்து பணிபுரிவாள். இந்த வேலைகள் போக மீதியுள்ள நேரத்தில் அத்தான் சுந்தரேசனோடு தோட்டத்திலோ வீட்டிலோ உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பாள். - அவள் இவ்வாறு தோட்டத்தில் சுந்தரேச அத்தானோடு பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் சில சமயம் நடராசன் வந்து சேருவான். அவன் கேட்கிற கேள்விகளுக்கு தங்கம் அமைதியாகப் பதில் சொல் வாள். ஆனால், சுந்தரேசன் அவனைக் கடிந்து பேசி விரட்டிவிடுவான். தங்கத்திற்குத் தன் அத்தானின் இந்தப்போக்கு வேதனையை உண்டாக்கும். இல்லாதவர்களிடம் இரக்கமும், எளியவர்களிடம் அன்பும் காட்டவேண்டுமென்பது தங்கத்தின் இதயலட்சியம். ஆனால், அத்தான் கருணையற்றவராக இருப்பது அவளுக்குத் துன் பத்தைக் கொடுத்தது. ஆனால், அத்தான்மேல் அவள் கொண்டிருந்த அந்த எண்ணம் மட்டும்-அந்த மயக்கம் மட்டும் மாறவில்லை. இப்படியாகத் தங்கத்தின் நாட்கள் உருண்டோடிக் கொண்டிருந்தன: ஒருநாள் அண்ணாமலைப் பண்டிதர் காலையில் நடராசனுடன் கதலிப்பட்டணத்திற்குப் போய் விட்டுத் திரும்பிவந்தார். வந்தவர் சமையற்கட்டில் போய்ச் சாப் பிட்டுவிட்டு மேலே தன் அறைக்குச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு தங்கம் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு சென்றாள். அவளைக் கண்டவுடனே அவர் ஒரே கோபமாகப் பேசத் தொடங்கிவிட்டார். வெறிபிடித்தவர் போல் ஆவர், 'ஏ:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/56&oldid=854510" இலிருந்து மீள்விக்கப்பட்டது