பக்கம்:மன ஊஞ்சல்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 47 தங்கம்? என் சாமான்களையெல்லாம் நீ எதற் காகத் துருவிப் பார்த்தாய்? என்று கேட்டார். அவர் கண்கள் கோவைப் பழம்போல் சிவந்திருந்தன. "நானா? நான் எதற்குப் பார்க்கிறேன்?' என்று ஒன்றும் புரியாத தங்கம் கேட்டாள். "பின்னே, நீதானே என் அறைக்கு அடிக்கடி வருகிறாய். அதோ பார், என் புத்தகங்களெல்லாம் அடுக்கி வைத்த மாதிரியே இல்லை. எல்லாம் தலைகீழாக இருக்கின்றன. நீ எதுவும் படிக்க வேண்டுமானால் என்னைக் கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டியது தானே. ஏன், நான் இல்லாத போது, இப்படி?’ என்று கேட்டார் அண்ணாமலைப் பண்டிதர். இப்போது அவர் குரல் சிறிது இறங்கி இருந்தது. 'இல்லையே! நான் எதையும் எடுக்கவில்லையே! என்று சொன்னாள் தங்கம். - "சரி, சரி, போ. பொய் சொல்லுபவர்களைக் கண்டால் எனக்குப் பிடிக்காது. என்முன் நிற்காதே!’ என்று அவளை விரட்டினார் பண்டிதர் அவள் கடைசிப் படியில் கூட இறங்கியிருக்கமாட்டாள். அண்ணாமலைப் பண்டிதர் மறுபடி யும் அலறும் சத்தம் கேட்டது. 'தங்கம்! தங்கம்; ஏ. தங்கம்! இங்கே வா!' என்று ஆத்திரத்தோடு கூச்சலிட்டுக் கூவியழைத்தார். தங்கம் மறுபடியும் மேலே போனாள். "தங்கம். இதோ பார். நான் பாராயணம் செய்கிற சின்னத் திருவாசகப் புத்தகத்தைக் காணோம். அது எனக்கு உயிர் மாதிரி, அதை நீ வைத்திருந்தால் கொடுத்துவிடு" என்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/57&oldid=854511" இலிருந்து மீள்விக்கப்பட்டது