பக்கம்:மன ஊஞ்சல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 மன ஊஞ்சல் "ஐ யோ ! எனக்கெதற்குத் திருவாசகம்?' என்று வருந்தினாள் தங்கம். . "உனக்குத் தேவையில்லாவிட்டால், வேறு யாருக்கும் தேவைப் பட்டிருக்கும். நீ எடுத்துக் கொடுத்திருப்பாய்!” என்றார் பண்டிதர். 'நான் அந்தமாதிரிச் செய்ய வில்லையே. அப்படி யாரும் எ ன க் கு வேண்டியவரில்லையே என்று பதில்சொல்லி வருந்தினாள் தங்கம்’ அ ன் னா ம ன ல ப் ப ண் டி த ர் அவள் தான் திருவாசகத்தைத் திருடி விட்டாள் என்று கூச்சலிட்டார். எப்போதும் அமைதியாகக் காணப்படும் அவர் முகம் அன்று அனல் போலச் சிவந்திருந்தது. அப்படி அவர் கத்தவே மரகத அம்மாளும் மேலே போய் என்ன செய்தியென்று அறிய முற்பட்டாள். கடைசியில் மாலை கந்தசாமி வாத்தியார் வந்ததும், அண்ணாமலைப் பண்டிதர் புகார் செய்தார். அவரும் என்ன செய்வது. பண்டிதருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மயங்கினார். அப்போதுதான் வெளியில் போய்விட்டுத் திரும்பிய சுந்தரேசன் விஷயம் என்னவென்று விசாரித்துக் தெரிந்து கொண்டு 'பூ இவ்வளவுதானா? இன்னொரு திருவாசகம் வாங்கிக்கொண்டால் போகிறது!’ என்றான். 'தம்பீ! உனக்கெப்படி அதன் அருமை தெரியும்? அது எங்கள் தாத்தா படித்த திருவாசகம் ஆயிற்றே!” என்றார் பண்டிதர். சரி. இங்கேதான் எங்காவது கிடக்கும். மறந்து எங்கே போட்டீர்களோ? தேடிப் பார்த் தால் கிடைக்கிறது. இல்லாவிட்டால் இன்னொரு புதுப்புத்தகம் வாங்கிக் கொள் கிறது” என்றான் சுந்தரேசன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/58&oldid=854512" இலிருந்து மீள்விக்கப்பட்டது