பக்கம்:மன ஊஞ்சல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 49 பிறகு எல்லோரும் திருவாசகப் புத்தக வேட்டையில் இறங்கினார்கள். கடையிெல் சாப்பாட்டுக் கூடத்தில் ஒரு சன்னலில் அதி இருப்பதைக் கண்டெடுத்தாள் தங்கம். 'பார்த்தீர்களா! நீங்கள்தான் சாப்பிட வந்தபோது மறந்து இங்கேசன்னலில் வைத்துவிட்டுப்போயிருக்கிறீர்கள்: என்றான் சுந்தரேசன். இல்லை. தங்கம்தான் இங்கே எடுத்து வந்திருக்கிறாள். நான் அடுக்கி வைத்த மாதிரியாகப் புத்தங்களும் இல்லை. கந்தசாமி. உன் மகளைக் கொஞ்சம் கண்டித்து வை' என்றார் பண்டிதர். இந்தச் சொற்கள் ஒவ்வொன்றும் தங்கத்தின் மனத்தை வெந்து போகும்படி செய்தன. அன்று இரவு தங்கம் சரியாகச் சாப்பிடவும் இல்லை. சரியாகத் துங்கவும் இல்லை. அண்ணாமலைப் பண்டிதர் குற்றம் சாட்டியதற்காக அவள் வருந்தவில்லை. ஆனால், அவர் தன்னைத் தொடர்ந்து வெறுப்பாக நடத்தி வருவதை நினைத்துத்தான் மிக வருந்தினாள். அ ப் பாவு க் கு ம். அம்மாவுக்கும்.ஏன் ஒரு கை முடவன் நடராசனுக்கும் கூட நல்லவராக இருப்பவர் ஊருக்கெல்லாம் உயர்ந்தவராக இருப்பவர் தன்னிடம் ஏன் எரிந்து விழவேண்டும் என்று நினைத்து வருந்தினாள். அண்ணாமலைப் பண்டிதரும் அன்று இரவு சரியாகத் துரங்க வில்லை. ஆனால், அவர் மனம் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தது. தி ரு ட் டு ப் போ ன திருவாசகத்தைப் பற்றியே அது திரும்பத் திரும்பச் சுற்றிக்கொண்டிருந்தது போலும். 10-4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/59&oldid=854513" இலிருந்து மீள்விக்கப்பட்டது