பக்கம்:மன ஊஞ்சல்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iᏙ லும் போது அந்தப் பக்கத்தின் அடியில் தொடரும் என்று போட்டுக் கதையை நிறுத்திவிடுவேன். அன்று மாலை அச்சாகும் இதழை எடுத்துப் பார்க்கும் திரு. ஆ. நடராசன் தாங்கள் எப்படி எழுதினர்கள் என்று வியப்பார். இதில் வியப்பதற்கென்ன இருக்கிறது என்று கேட்டு, வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்குவேன். இப்படி வாரந்தோறும் வளர்ந்த இந்தக் கதை காதல் கதைதான்! ஒர் இளம் பெண்ணின் காதல் எண்ணங்கள் எப்படி அலைபாய்கின்றன. காதல் பாதையில் உள்ள தடை கள், மேடுபள்ளங்கள், கல்லு முள்ளுகள், சிலசமயம் பாதையே தவறான பாதையாகும் நிலை, அதனால் ஏற்படும் தடுமாற்றம், அப்படித் தடுமாறும் நிலையில் நெறிப்படுத்த வேண்டிய நிலை இவற்றையெல்லாம் தங்கம்' என்ற பெண்ணின் மூலம் காட்டியிருக்கின்றேன். ஒரு காதலியின் மன உறுதி எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக இருக்கிறாள் ராதா. தற்போது வெளிவருகின்ற மாத நாவல்களுக்கும் இந்தப் புதினத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. ஒரு பருவப் பெண்ணின் நெஞ்சில் பீறிட்டு எழும் காதல் உணர்வு வெறும் வெறியாகாமல் இது போன்ற புதினங்களால் நெறிப்படுத்தப் பட்டு, அவளை மேனிலைப் படுத்தும் என்பது என் துணிவு. ஒர் எழுத்தாளன் தன் எழுத்தின் மூலம் படிப்பவர் உள்ளத்தில் நல்லுணர்வுகளைப் புகுத்துவதே தன் கடமை யாகக் கொள்ள வேண்டும். வெறியுணர்வுகளைத் துரண்டும் எழுத்தாளன், விளம்பரம் பெறும் அளவு பாராட்டுப் பெறுவானா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/6&oldid=854514" இலிருந்து மீள்விக்கப்பட்டது