பக்கம்:மன ஊஞ்சல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ዐ6ዥ ஊஞ்சல் 7. கடிதத்தால் வந்த கடுகடுப்பு திருவாசகம் திருட்டுப் போய்த் திரும்பி வந்த நாளி விருந்து அண்ணாமலைப் பண்டிதர் கிறுக்குப் பிடித்தவர் போலிருந்தார். அந்த வீட்டில் இருந்த ஒவ்வொருவரையும் சந்தேகக் கண்ணோடு பார்த்தார். இவ்வளவு சீர்திருத்தம் பேசுகிறவர், ஒரு புத்தகம் காரணமாக இப்படி மருக்கொண்டவர்போல் இருக்கிறாரே என்று கந்தசாமி வாத்தியார் ஆச்சரியப்பட்டார். மரகத அம்மாளுக்கும் பண்டிதரின் போக்கு சரிவரப் புரியவில்லை. அண்ணாமலைப் பண்டிதரின் பார்வையைச் சந்திக்கும் போதெல்லாம் தங்கத்திற்கு மனத்திற்குள் கோபமாக இருந் தது. இன்னும் அவர் தன் மேலே கொண்ட சந்தேகத்தை விடவில்லை என்பதை எண்ண எண்ண அவள் இதயம் கொதித்தது. சுந்தரேசனுக்கோ அண்ணாமலைப் பண்டிதரின் கண்களை ஏறெடுத்துப் பார்க்கவே பயமாயிருந்தது. ஏதோ அவருடைய முகத்திலே அபாயக் குறியைக் கண்டவன்போல் அவர் எதிர்ப்படும் போதெல்லாம் விலகித் திரும்பி நடந் தான். பண்டிதர் ஒவ்வொருவர் மீதும் தன் சந்தேகப் பார் வையை நிலை நாட்டிய போதெல்லாம் இப்படிப்பட்ட எதிர் விளைவுகளைக் கண்டார். ஆனால், அவர் வழக்கம்போல் செய்கிற காரியங்களையெல்லாம் வழுவில்லாமல் செய்து கொண்டிருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/60&oldid=854515" இலிருந்து மீள்விக்கப்பட்டது