பக்கம்:மன ஊஞ்சல்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 51 நாள்தோறும் காலையில் நடராசனுடன் கதவிப் பட்டணத்திற்குப் போய் வந்தார். ஜமீந்தார் வீட்டு வில் வண்டியை வழக்கம்போல் நடராசன் ஒட்டிக் கொண்டு சென்றான். நடராசனுக்கு இருந்த பைத்தியம் பண்டிதருக்குத் திரும்பி விட்டதோ என்றுகூட நினைக்கும்படியாக இருந்தது. நடராசன் இப்போதெல்லாம் முன்னைப்போல் இல்லை. வரவரத் திருக்தி வந்துவிட்டான். முன்னெல்லாம் வீதியிலே பெண்களோ, சிறுவர்களோ கிண்டல் கேலி செய்தால் அசடு போல அவற்றைக் கேட்டுக் கொண்டு நிற்பான் அல்லது சில சமயம் கோபத்தோடு அவர்களை அடிக்கப் போவான். சில சமயம் யாராவது தன்மீது கல்லையெறிந்தால், கொக்கரித் துக்கொண்டு அதே கல்லை எடுத்துக் கொண்டு அவர்கள் மீது எறிய விரட்டிக்கொண்டு ஓடுவான். பள்ளிப் பிள்ளைகள் பல்லைக் காண்பித்துப் பைத்தியம் என்று சிரித்தால், இவனும் பல்லைக் காண்பித்து நீதான் பைத்தியம் என்று சொல்லிச் சிரிப்பான். இப்போது அப்படியில்லை. யார் தன்னை என்ன சொன்னாலும், அது காதில் விழாதவன் போல் திரும்பிப் பார்க்காமல் தன்பாட்டுக்கு நடந்து செல்வான். யாரோடும் பேசும்போது முன் போல் கெக்கே பிக்கே என்று உளறாமல், சாந்தமாகவும் பதட்ட மில்லாமலும் அமர்ந்து பேசுவான். தன்மேல் யாரும் கல்லை யெறிந்தால் கூட கவனிக்காதவன் போல் நடந்து செல்வான். அப்போது அவனைப் பார்த்தால் பெரிய மகான்களைப் பார்ப்பது போலிருக்கும். நடராசனிடம் ஏற்பட்ட இந்த் மாறுதல் ஊரில் இருந்த எல்லோரையுமே பெருவியப்பில் ஆழ்த்தியது. கல்வியினல் ஆகாத தொன்றில்லை; அதுவும் அண்ணாமலைப் பண்டிதர் போன்ற அறிஞர்களால் செய்ய முடியாத காரியம் எதுவும் இல்லை என்று எல்லாரும் எண்ணினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/61&oldid=854516" இலிருந்து மீள்விக்கப்பட்டது