பக்கம்:மன ஊஞ்சல்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 மன ஊஞ்சல் - நடராசனுக்குக் கற்றுக் கொடுக்கும் கல்வியை ஏன் நெய்யூரிலேயே இருந்து கற்றுக்கொடுக்காமல், பண்டிதர் கதவிப்பட்டணம் அழைத்துச் செல்லவேண்டும் என்று சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தும் கந்தசாமி வாத்தியாருக்கோ முருகேசருக்கோ உண்மை புலப்படவில்லை. இன்று பைத்தி யத்தைத் தெளிவித்தார். நாளை கையைக்கூட வளரச் செய்துவிடுவார். அவரிடம் ஏதோ சித்து இருக்கிறது என் பதில் சந்தேகமே இல்லை என்று முருகேச வாத்தியார் நினைத்தார். தான் நினைத்ததை எல்லோரிடமும் தெரி வித்தும் வந்தார். அவருக்குத் தன் பிள்ளை நடராசன் திருந்தி வருவதில் அத்தனை ஆனந்தம்: ஒரு நாள் நடராசனும், அண்ணாமலைப் பண்டிதரும் கதலிப் பட்டணத்தில் இருந்த மருத்துவ மனை அருகில் உள்ள வீதியில் சென்றுகொண்டிருந்தார்கள். அண்ணா மலைப் பண்டிதருக்கு யாரோ தன்னைப் பின் தொடர்ந்து வருவது போல் தோன்றியது. அடிக்கடி பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே வந்தார். ஆனால் அவர் கண்ணுக்கு யாரும் தட்டுப்படவில்லை. எல்லாம் மனப்பிராந்தி என்று நினைத்துக் கொண்டார். ஆனால் ஏதோ ஒன்று அவர் மனத்திற்குள்ளேயே யாரோ தன்னை வேவு பார்க்கிறார்கள் என்று உணர்த்திக் கொண்டிருப்பது போலவே யிருந்தது. எப்படியோ மனத்தைச் சரிப்படுத்திக் கொண்டார். இரண்டு பேரும் மருத்துவ மனைக்கு வந்து முன் வாசலில் கிடந்த ஒரு நாற்காலியில் உட்கார்ந்தார்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு அவர்கள் ஒளி மருத்துவம் நடக்கும் பிரிவிற்குப் போனார்கள். அப்போது நடராசன் "ஐயா! அதோ சுந்தரேசன்!” என்று சுட்டிக் காட்டினான். சுட்டிக் காட்டிய பக்கம் பண்டிதர் சட்டென்று திரும்பிப் பார்த்தார். சுந்தரேசன் வெகு வேக மாக மருத்துவவிடுதியை விட்டுச் சென்றுகொண்டிருந்தான். அவன்தான் தன்னைத் தொடர்ந்து வந்திருப்பானோ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/62&oldid=854517" இலிருந்து மீள்விக்கப்பட்டது