பக்கம்:மன ஊஞ்சல்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 53 அண்ணாமலைப் பண்டிதருக்குச் சந்தேகம் ஏற்பட்டது; ஆனால் அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இருந் தாலும் அவர் அன்று முதல் சுந்தரேசன் மீது ஒரு கண் வைத்துக்.ெ காள்ள ஆரம்பித்தார். பிறர் தன்னை உளவு பார்ப்பது என்பது அவருக்குப் பிடிக்கவில்லை. - இப்படி நாட்கள் ஒடிக்கொண்டிருந்தன. கந்தசாமி வாத்தியார் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் அங்கேயே நிலை யாகத் தங்கி விட்டார்கள். கந்தசாமி வாத்தியாரும் யாரிட மும் கடுமுகம் காட்டாமல் எப்படியோ சமாளித்துக் கொண் டிருந்தார். ஒரு நாள் பிற்பகலில் கதலிப் பட்டணத்திலிருந்து திரும்பி வந்த அண்ணாமலைப் பண்டிதர் வண்டியிலிருந்து இறங்கினார் நடராசன் அவர் இறங்கியவுடன் வண்டியைத் தட்டிவிட்டான். வீட்டு வாசற்படியில் காலடியெடுத்து வைத்த அண்ணாமலைப் பண்டிதர் சார் போஸ்ட் என்ற குரல் கேட்டுத் திரும்பின்ார். தபால்காரன் இரண்டு கடிதங் களை அவரிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்' அவற்றை வாங்கிய அண்ணாமலைப் பண்டிதர் மேல் முகவரியைப் பார்த்தார். இரண்டும் சுந்தரேனுக்குத்தான் வந்திருந்தன. அனுப்பு முகவரியை நோக்கினார். ஒன்றில் கயி. குணவதி, சித்திர நல்லூர் என்றிருந்தது. இன்னொன்றில் அனுப்பு முகவரி குறிக்கப்படவில்லை. ஆனால், அஞ்சல் முத்திரையிலிருந்து சென்னை என்று கண்டுகொள்ள முடிந்தது. இரண்டையும் தன் கையில் இருந்த புத்தகத்திற் கிடையில் வைத்து மறைத்துக் கொண்டு அண்ணாமலைப் பண்டிதர் வீட்டினுள்ளே நுழைந்தார். அப்படி நுழையுமுன் யாரும் தன்னைப் பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் திரும்பிப் பார்த்துக்கொண்டார். சாப்பிட்டு முடிந்ததும் மேலே தன்னறைக்குச் சென்றவர் அறைக்கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளேயிருந்து கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/63&oldid=854518" இலிருந்து மீள்விக்கப்பட்டது