பக்கம்:மன ஊஞ்சல்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 - மன ஊஞ்சல் கடிதங்களை ஒவ்வொன்றாக எடுத்து மிகவும் கவனமாகப் பிரித்துப் படித்தார். குணவதியம்மாளிடமிருந்து வந்த முதல் கடிதத்தைப் படித்தபோது அவர் முகத்தில் ஆச்சரியமும், திகைப்பும், கடுகடுப்பும், நகைப்பும் ஆகிய உணர்ச்சிகள் மாறி மாறிப் படர்ந்தன. ஆனால் உறையில் முகவரி யில்லாத இரண்டாவது கடிதத்தைப் படித்தபோது அவருக்கு ஒரே கோபம் கோபமாக வந்தது. வெறுப்புணர்ச்சி அப்படியே அவர் முகத்தில் தாண்டவமாடியது. நெடுநேரம் அந்த இரண்டாவது கடிதத்தையே கூர்ந்து நோக்கியபடி சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். பிறகு ஏதோ முடிவுக்கு வந்தவர்போல் எழுந்திருந்தார். குணவதியம்மா ளிடமிருந்து சுந்தரேசனுக்கு வந்த கடிதத்தைப் பத்திரமாகத் தம் பெட்டிக்குள்ளே வைத்துப் பூட்டினார். பிறகு மிகவும் கவனமாகத் தான் பிரித்த அந்தக் கடித உறைகளில் அனுப்பு முகவரியில்லாத உறையை எடுத்து அதனுள் கடிதத்தை வைத்து மூடித் தாம் முன்னேற்பாடாகக் கொண்டு வந்திருந்த சோற்றுப் பருக்கையைத் தடவி உறையை ஒட்டி விட்டார், இரண்டு மூன்று முறை தான் அதைப் பிரித்த அடையாளம் தெரிகிறதா என்று திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டார். அவர் தன் வேலையெல்லாம் முடிந்து திருப்திப்பட்டுக் கொண்டிருப்பதற்கும் அறைக்கதவு தட்டப் படுவதற்கும் சரியாக இருந்தது. அவசர அவசரமாக அருகில் இருந்த சோற்றுப் பருக்கையை எடுத்து எச்சிற் பணிக்கத்திற் குள்ளே தள்ளிவிட்டார். பின் தன் கையில் இருந்த கடிதத்தை மெத்தைக்குக் கீழே வைத்து விட்டுக் கதவைத் திறந்தார். அங்கே வெற்றிலைப் பெட்டியுடன் தங்கம் நின்று கொண்டிருந்தான். தங்கம்:கதவுத் துவாரம் வழியாகத் தன்னைக் கவனித் . திருப்புரளோ என்ற சந்தேகம் ஏற்பட்டது பண்டிதருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/64&oldid=854519" இலிருந்து மீள்விக்கப்பட்டது