பக்கம்:மன ஊஞ்சல்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 55 உடனே அவர் மூக்குத் துடித்தது. எவ்வளவு நேரமாக இங்கே நின்று கொண்டிருக்கிறாய்?" என்று ஒர் அதட்டு அதட்டினார். தங்கம் பொறுமையுடன். 'இப்போதுதான் வந்தேன். வந்தவுடன் கதவைத் தட்டினேன். நீங்கள் தூங்கிக்கொண்டு இருந்திருந்தால் தெரியாமல் அதைக் கலைக்க நேர்ந்த தற்காக மன்னிக்க வேண்டுகிறேன்." என்றாள் தங்கம். அவள் தன்னைக் கவனிக்கவில்லை என்று அவருக்குத் தோன்றியது. "சரி, வெற்றிலைப் பெட்டியை வைத்துவிட்டுப் போ' என்றார். தங்கம் அவர் கட்டிலில் பெட்டியை வைத்துவிட்டுச் சென் றாள். அவள் ஐந்தாறு படிகூடக் கீழே இறங்கியிருக்க மாட்டாள், அதற்குள் மேலேயிருந்து பண்டிதர் கூப்பிட்டார். 'தங்கம் இந்தத் தபால் உன் அத்தானுக்கு வந்தது. தபால் காரனிடம் நான் வாங்கினேன். உன் அத்தான் வந்தவுடன் இதைக் கொடுத்துவிடு' என்று உறையை அவளிடம் கொடுத்தார். அவள் பண்போடு அதை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள். - பகலெல்லாம் எங்கெங்கோ வெளியில் சுற்றிவிட்டு சுந்த ரேசன் மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து சேர்ந்தான். காப்பி குடித்த பிறகு தங்கமும் சுந்தரேசனும் தோட்டத்திற் குள்ளே சென்றார்கள். "அத்தான் உங்களுக்கொரு கடிதம் வந்திருக்கிறதே!” என்றாள் தங்கம். - "யாரிடமிருந்து தங்கம்?' * அதுதான் தெரியவில்லை. ஆனால் சென்னைத் தபால் முத்திரை,இருக்கிறது!' என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/65&oldid=854520" இலிருந்து மீள்விக்கப்பட்டது