பக்கம்:மன ஊஞ்சல்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56. மன ஊஞ்சல் சென்னை என்றவுடனே சுந்தரேசனின் முகம் கருத்தது. ஆனால் சட்டென்று அதைச் சமாளித்துக் கொண்டான். தன் இரவிக்கை இடுக்கில் இருந்த கடிதத்தை எடுப்பதில் முனைந் திருந்த தங்கம் அவன் முகமாறுபாட்டைக் கவனிக்கவில்லை. கடிதத்தை எடுத்து அவன் கையில் கொடுத்தாள் தங்கம். அதற்குள், மரகத அம்மாள் தங்கம், தங்கம்' என்று அவளைக் கூப்பிடும் சத்தம் கேட்டது. தங்கம் போய் விட்டாள். சுந்தரேசன் பரபரப்போடு அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான். அதைப் படிக்கப் படிக்க அவ லுக்கு ஆத்திரமும் கோபமும் அச்சமும் பீதியும் ஏற்பட லாயின. இதற்குள் திரும்பி வந்த தங்கம் அத்தான், அடுத்த வீட்டு ராதாவோடு கோயிலுக்குப் போய் வருகிறேன், என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டாள். நல்ல வேளை! அவள் தன்னைக் க வ னி க் க வில்லை. இல்லாவிட்டால், தன் னிலையைத் தன் முகமே காட்டிக் கொடுத்திருக்கும் என்று எண் ணிக் கொண்டான். சுந்தரேசன் அந்தக் கடிதத்தைச் சுக்குச் சுக்காகக் கிழித்துப் போட்டுக் கொண்டிருந்தான். அப்போது அங்கே வந்து சேர்ந்தார் அண்ணாமலைப் பண்டிதர். அவரைக் கண்டதும் அவன் தன் உணர்ச்சிகளை மறைத்துக் கொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை. 'என்ன தம்பி! ஒரே வாட்டமாயிருக்கிறாயே? இது என்ன? ஏதோ கடிதத்தைக் கிழித்துப் போட்டுவிட்டாய் போலிருக்கிறகே!' என்று அவர் கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/66&oldid=854521" இலிருந்து மீள்விக்கப்பட்டது