பக்கம்:மன ஊஞ்சல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ID6 of ஊஞ்சல் 8. இலண்டனுக்கும் போய் வருவேன் பொதுவாக சுந்தரேசனும் அண்ணாமலைப் பண்டிதரும் ஒருவரிடம் ஒருவர் நடந்துகொண்டதைப் பார்த்தால் ஒரு வரைப் பற்றிய ரகசியத்தை மற்றவர் அறிந்துகொண்டதைப் போலவும், அதை ஒருவருக்கொருவர் வெளிக் காட்டிக் கொள்ளாததைப் போலவும் இருந்தது. சுந்தரேசன் பண்டிதருடைய உண்மையைத் தான் அறிந்திருப்பதாக எண்ணிக் கொண்டான். ஆனால் தன்னைப் பற்றி அவர் இதுவரை தெரிந்து கொள்ளவில்லை யென்றும், இனிமேல் தெரிந்துகொண்டு விடாதபடி சிறிது காலம்வரை பார்த்துக் கொள்ள வேண்டும் மென்றும் தீர்மானித்துக் கொண்டான். அண்ணாமலைப் பண்டிதரோ முதலில் சுந்தரேசனைப் பற்றிச் சந்தேகம் மட்டுமே கொண்டிருந்தார். இப்போது அந்த இரண்டு கடிதங்களையும் படித்துப் பார்த்த பிறகு அந்தச் சந்தேகமெல்லாம் உண்மையென்று நன்றாகத் தெரிந்துகொண்டார். அத்தோடு அவன் தன்னைக் கண்டு கொண்டான் என்பதையும் தெரிந்து கொண்டார். ஆனால் அவனிடம் தான் எதுவும் தெரிந்துகொள்ளாதது போலவே நடந்துகொண்டார். மல்லிகைப் பந்தலின் அடியில் சுந்தரேசன் கிழித்துப் போட்ட கடிதத்தைப் பற்றி அவர் சேட் டவுடனேயே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/67&oldid=854522" இலிருந்து மீள்விக்கப்பட்டது