பக்கம்:மன ஊஞ்சல்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ம ைஊஞ்சல் கலங்கிப் போனான். ஆனால், உணர்ச்சிகளை உடனுக்குடன் மாற்றி மறைத்துக்கொள்ளும் கலையில் வல்லவனான் சிந்தரேசன் சட்டென்று தன் திகைப்புணர்ச்சியைக் குறைத்துக் கொள்ள முயன்றான். ஆனால், அதற்குள் அவனுக்கு வேறொரு புது யோசனை உதயமாகியது. அப்படியே கவலையுணர்ச்சியைத் தன் முகத்தில் சற்றேனும் மாறாமல் மறையாமல் கூடாமல் குறையாமல் தேக்கி வைத்துக் கொண்டு மெதுவான குரவில், என் 'கஷ்டத்தை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்?’ என்றான். பெற்ற தகப்பனிடமே கற்ற வித்தையைக் காட்டும் பிள்ளையைப் போலத் தன்னிடம் சுந்தரேசன் நடிக்கிறான் என்பதை அறிந்த அண்ணாமலைப் பண்டிதர் அவன்ைக் காட்டிலும் அருமையாக நடித்தார். 'தம்பீ! அப்படி உனக்கென்ன கஷ்டம்? என்னிடம் தாராளமாகச் சொல் என்னால் முடிந்தால் நான் உனக்கு எத்தகைய உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்' என்றார். - - 'ஐயா நீங்கள் தமிழாசிரியர். உங்களிடம் நூல்களை வேண்டு மானால் கேட்கலாம். புத்திமதிகளை எதிர்பார்க் கலாம். உடல் உழைப்பினால் வரக்கூடிய உதவி ஒத்தா சையை வேண்டுமானால் பெறலாம். ஆனால் எனக்கு வேண் டியது இவையெல்லாம் அல்லவே' என்றான்.

  • தம்பி, உள்ளதைச் சொன்னால் அல்லவா விளங்கும். பணம் எதுவும் வேண்டுமானாலும் நான் உனக்குத் தயார் பண்ணித் தர முடியும்’ என்று குசுகுசுத்த குரலில் சொன்னார்,

சுந்தரேசனும் அவரை உற்று நோக்கினான். ஒருவேளை அவருக்குத் தன்னைப் பற்றித் தெரிந்திருக்குமோ, தெரிந்து கொண்டே ஆழம் பார்க்கிறாரோ என்று வினாடி நேரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/68&oldid=854523" இலிருந்து மீள்விக்கப்பட்டது