பக்கம்:மன ஊஞ்சல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 மன ஊஞ்சல் "ஐயா! சென்னை யென்ன, இ லண் டனு க் கே . வேண்டுமானாலும் போய் வருகிறேன். என்னுடைய இக்கட்டுத் தீர்ந்தால் போதும் என்றான் சுந்தரேசன். “சரி, இந்தப் பணத்தை எப்போது தம்பி, திருப்பித் தரு வாய்?' என்று கேட்டார் பண்டிதர். திருப்பிக் கொடுக்கும் எண்ண்ம் சுந்தரேசனுக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. இருந்தாலும் 'நெல். விளைந்து வரட்டும். தை மாதம் கொடுத்து விடுகிறேன்" என்று சத்தியவான் அரிச்சந்திரன் பரம்பரைபோல் சொன்னான். சரி, தம்பி நீ எப்போது சென்னைக்குப் புறப்படுகிறாய் என்று சொல். நான் என் நண்பருக்குக் கடிதம் கொடுக்கிறேன். நீ அதைக் கொண்டுபோய்க் காட்டிப் பணம் வாங்கிக் கொள்ளலாம்' என்றார் பண்டிதர். சுந்தரேசனுக்கு ஒரு சின்ன சந்தேகம் எழுந்தது. "பண்டிதரே! கையிலிருக்கிற காசைச் செலவழித்துக் கொண்டு பட்டணத்திற்குப் போய் அங்கு பணம் கிடைக் காவிட்டால்...?' என்றான். 'தம்பி ஏதோ கஷ்டத்தில் இருப்பவனுக்குச் சமயத்தில் உதவி வைப்போமே யென்று நான் முன்வந்தேன். உனக்குச் சந்தேகமாக இருந்தால் போகவே வேண்டாம். எனக்கும் பொறுப்பு விட்டதுபோலிருக்கும்’ என்று வெறுப்பான குரலில் பேசினார் அண்ணாமலைப் பண்டிதர். சுந்தரேசனுடைய சந்தேகம் பறந்துபோய் விட்டது. "ஐயா, மன்னிக்க வேண்டும். உங்களைப் புரிந்து கொள்ளாமல்பேசிவிட்டேன். கோபித்துக் கொள்ளக்கூடாது' என்று கெஞ்சினான் சுந்தரேசன். "சரி, தம்பீ. நீ எப்போது சென்னைக்குப் புறப்படு றாய்" என்று வெடுக் கென்று கேட்டார் பண்டிதர்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/70&oldid=854526" இலிருந்து மீள்விக்கப்பட்டது