பக்கம்:மன ஊஞ்சல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ህ06ă ஊஞ்சல் 9. புளியமரத்து ராக்கப்பன் அடுத்த வீட்டு ராதாவும் தங்கமும் கோயிலுக்குப் போய்த் திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். சென்ற வழியாகவே திரும்பி வந்துகொண்டிருந்தபோது ஒரு சந்து முனைக்கு வந்ததும் ராதா, தங்கத்தின் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள். அவள் தன்னை நிறுத்திய காரணம் புரியாமல் தங்கம் ராதாவை நோக்கினாள். 'தங்கம், நாம் இந்தப் பாதையாகப் போக வேண்டாம். மேட்டுத் தெருப்பக்கமாகப் போகலாம்' என்றாள் ராதா. "இந்தச் சந்தில் போய்த் திரும்பினால் நம் வீதி வந்துவிடும். மேட்டுத் தெரு போய்த் திரும்புவ தென்றால் மூன்று வீதி தரண்டி வர வேண்டுமே!' என்று சலித்துக் கொண்டாள் தங்கம். 'மூன்று வீதி தாண்டி நடந்தால் கால் வவியோடு போகும். அதைப் பார்த்தால் இந்தச் சந்தில் போய் என்னமும் ஆகிவிட்டால் என்ன செய்வது?' என்று கேட்டாள் ராதா. “என்ன ஆகும்?’ புரியாமல் தான் கேட்டாள் தங்கம். "என்ன ஆகுமா? ஏண்டி தங்கம். நீ இந்த ஊரில்தான் இருக்கிறாயா? இந்தச் சந்தின் அந்த முனையிலே இருக்கிறதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/72&oldid=854528" இலிருந்து மீள்விக்கப்பட்டது