பக்கம்:மன ஊஞ்சல்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 63 புளிய மரம். அந்தப் புளிய மரத்திலே. ராத்திரி நேரத்தில் அந்தப் பக்கம் போகக் கூடாதடி. அதுவும் பெண் பிள்ளைகள் தனியாகப் போனால் அது வசமாகப் பிடித்துக் கொண்டு விடுமாம்' என்று நடுநடுங்கிக் கொண்டே சொன்னாள் ராதா. இதைக் கேட்டுத் தங்கம் சிரித்தாள். அவள் குரலோடு இன்னொரு குரலும் சேர்ந்து சிரிப்பது போலிருந்தது. இரு பெண்களும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். 'பயப்படாதீர்கள்’’! நான் புளியமரத்துப் பிசாசல்ல. சாதாரண மனிதன் நடராசன் தான்!' என்று சொல்லிக் கொண்டு நெருங்கி வந்தான் நடராசன். 'நானும் இந்தச் சந்து வழியாகத்தான் போக வேண்டியிருக்கிறது. நீங்கள் பயப்படாமல். என்னோடு வரலாம்' என்று முன் நடந்தான் நடராசன். இரண்டு பெண்களும் அவனைப் பின்தொடர்ந்தார்கள். தங்கத்திற்குப் பிசாசைப்பற்றிப் பயமேயில்லை. ஆனால், ராதாவிற்கு உள்ளே நெஞ்சு திகுதிகுவென்துதான் இருந்தது. நடராசன் ராதா பக்கம் நோக்கி, "ராதா, புளிய மரத்துக்குப் பிசாசு எப்படி வந்தது? கொஞ்சம் சொல் பார்க்கலாம் என்று கிண்டலான குரலில் கூறினான்.

இந்த இடத்தில் நான் அதைச் சொல்லமுடியாது’ என்று பயத்தோடு கூறினாள் ராதா.

"அப்படியானால், அ ந் த ப் புளியமரத்தடியிலேயே சொல்கிறாயா!' என்று கேட்டான் நடராசன். பைத்தியம்: பைத்தியம்: இன்ன இடத்தில் இன்னது தான் பேச வேண்டுமென்று தெரியாது உனக்கு' என்று கடிந்துகொண்டாள் ராதா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/73&oldid=854529" இலிருந்து மீள்விக்கப்பட்டது