பக்கம்:மன ஊஞ்சல்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மன ஊஞ்சல் "ஐயோ! பைத்தியமாம் பைத்தியம்!யாருக்குப் பைத்தியம் இத்த ஊரிலே எத்தனையோ பைத்தியங்கள் இருக்கின்றன. பணப்பைத்தியம், பதவிப் பைத்தியம், பெண்பைத்தியம், சோஸ்யப் பைத்தியம், சாஸ்திரப் பைத்தியம், சகுணப் பைத் தியம், பிசாசுப் பைத்தியம், இப்படி எத்தனையோ இருக் கின்றன. அதையெல்லாம் விட்டுவிட்டு எல்லோரும் என்னைப் பைத்தியமென்கிறார்கள். நீ ஒரு பிசாசுப் பைத்தியம், நீ பார்த்து என்னைப் பைத்தியமென்றால் எப்படி?’ என்று உள்ளுக்குள்ளே தனக்கிருந்த கோபத்தையடக்கிக் கொண்டு நிதானமாகக் கேட்டான் நடராசன். 'அடி ஆத்தே! இவனுக்கு இவ்வளவு பேசத் தெரிந்தது எப்படியடி தங்கம்?' என்று வியப்புடன் கேட்டாள் ராதா. "ராதா! இப்போது இவருக்குப் பைத்தியமில்லை. அதெல்லாம் தெளிந்துவிட்டது” என்று அவள் காதுக்குள் கூறினாள் தங்கம். நடராசன் முன்பு பைத்தியமாயிருந்தான் என்றுகூட அவன் முன்னால் சொல்ல அவளுக்கு ஏனோ நாவெழவில்லை. "ராதா! நல்லதுக்குத்தான் கேட்கிறேன். அந்தப் பிசாசு வந்த கதையைக் கொஞ்சம் சொல்லேன், இங்கேயே நின்று வேண்டுமானாலும் சொல். நீ சொல்வி முடித்ததும் நாம் நடக்க ஆரம்பிக்கலாம்' என்றான் நடராசன். 'சொல்லடி, அவர்தான் கூட இருக்கிறாரே! என்ன பயம்?' என்று தங்கமும் ஊக்கப்படுத்தினாள். ராதா சொன்னாள். 'நம் ஊரிலே ராக்கப்பன் என்று ஒருவன் இருந்தான், அவன் சின்ன வயதிலேயே திருட்டு, குடி, சூது என்று கெட்டலைந்தான். கடைசியில் அவனுக்குக் கலியாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வாழவேண்டு மென்று தோன்றியது. ஆனால், ஊரிலே ஒருவர் கூடப் பெண் கொடுக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/74&oldid=854530" இலிருந்து மீள்விக்கப்பட்டது