பக்கம்:மன ஊஞ்சல்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் . 65 தான் திருந்தி வாழுவதாகக் கோயிலிலே சத்தியம் பண்ணிக் கொடுப்பதாகக் கூறியும்கூட எந்தப் பெண்ணும் அவனைக் கட்டிக் கொள்ள முன் வரவில்லை. இதனால் துக்கமடைந்த அவன், இந்தப் புளிய மரத்திலே ராத்திரி நேரத்திலே வந்து தூக்குப்போட்டு மாட்டிக் கொண்டு செத்துப்போய்விட்டான். இப்போது ஆவியுருவத்தில் இருந்து கொண்டு தினமும் ராத்திரி நேரத்தில் ஆண்துணையில்லாமல் தனியாக வரும் பெண்களைப் பிடித்துக் கொள்கிறானாம் என்றாள் ராதா, "இதுவரை யாரையும் அவன் பிடித்திருக்கிறானா?* 'இல்லை, சில பேரைப் பயமுறுத்தியிருக்கிறான். அவர்கள் பயந்து காய்ச்சலாகக் கிடந்திருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்கள் இந்த வழியாகப் போவதே யில்லை." 'சரி, பயந்து காய்ச்சலானவர்களை என்ன செய் வார்கள், ! 'கோயில் குருக்களையாவிடம் கூட்டிச் செல்வார்கள். அவர் விபூதிமந்திரித்துக் கொடுப்பார். பிறகு காய்ச்சல் நின்று குணமாகி விடும்' என்றாள் ராதா. - “ராதா, நான் சொல்வதைக் கவனி. ஆவி என்பதாக ஒன்று கிடையாது. வெளியில் உள்ள காற்றுத்தான் நம் மூக்கின் வழியாக உடலுக்குள்ளே போய்ப் போய் மீள்கிறது. இதைத்தான் மூச்சு விடுதல் என்கிறோம். உடம்பு நன்றாக இருக்கும் வரை மூச்சு ஒழுங்காக ஒடிக்கொண்டிருக்கும். உடம்புக்குக் கோளாறு என்றால் மூச்சு ஓட்டத்தின் வேகமும் மாறி விடும். இந்த மூச்சு ஓட்டம் நின்று போனால்தான் மனிதன் செத்துப்போகிறான். அவன் எப்படிப்பட்ட சாவை யடைந்தாலும் மூச்சு நின்றதும் மூக்கில் ஒடிக்கொண்டிருந்த காற்று, காற்றோடு காற்றாகக் கலந்துவிடுகிறது. அது ஆவியாகவோ பிசாசாகவோ அலைவதோ திரிவதோ 6 س--ما

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/75&oldid=854531" இலிருந்து மீள்விக்கப்பட்டது