பக்கம்:மன ஊஞ்சல்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மன ஊஞ்சல் கிடையாது. ஒருவன் தூக்குப் போட்டுக் .ெ கா ன் டு செத்துவிட்டால் அவன் பிசாசாகி விடுகிறான் என்பது நம் கற்பனைதான். இந்தக் கற்பனையை உண்மை யென்று நம்புவதால்தான் நாம் அந்த இடத்தில் செல்லும்போது பயத்தோடுசெல்கிறோம். அவ்வாறு பயத்தோடு செல்வதால் அந்த இடத்தை யடைந்ததும் அது அதிகரித்து நம்மை அதிர்ச்சியடையச் செய்துவிடுகிறது. இதனால் தான் காய்ச்சல், நடுக்கம் எல்லாம் உண்டாகின்றன. பூசாரி விபூதி மந்திரித்தவுடன் பிசாசு நம்மை விட்டு நீங்கி விடுவதாக நம்பி மனந்தெளிகிறோம். நம் நோயும் பறந்து விடுகிறது. தெரிகிறதா என்று கேட்டான் நடராசன். "தெரிகிறது என்று ராதா சொல்லி வாய் மூடுமுன் திடீ. ரென்று அந்தச் சந்தின் மறு கோடியிலிருந்த புளியமரத்தின் கிளைகள் பலமாகக் குலுங்கிய சத்தமும், அதன் பழங்கள் உதிர்ந்து விழுகிற ஓசையும் கேட்டன. "ஐயோ! பிசாசு!" என்று கத்திக் கொண்டே ராதா நடராசனைப் பிடித்துக் கொண்டாள். 'ஆ' என்று கூவிக் கொண்டே தங்கமும் அதிர்ச்சியுடன் அவனைத் தழுவினாள். சட்டென்று ஏற்பட்ட அந்தச் சத்தத்தைக் கேட்டுப் பிரமித்து நின்ற தடராசன் அவர்கள் இருவரையும்தாங்காமல் சாய்ந்து தரையில் வீழ்ந்தான். அவனோடு அந்தப் பெண்களும் வீழ்ந்து மூர்ச்சையடைந்து போனார்கள். கீழே விழுந்த நடராசன் தன்னைத் தானே நம்ப முடியாத அளவு திகைத்துப் போயிருந்தான். விழுந்து கிடந்தபடியே சுற்றிச் சூழ்ந்திருந்த இருட்டை உற்று நோக்கினான். அவன் கண்ணுக்கு எதுவும் புலப்பட வில்லை. ஆனால், அவன் காதிலே தான் அந்தப் புளிய மரத்தின் கிளைகள் விட்டு விட்டுக் குலுங்கிக் கொண்டிருந்த ஓசை கேட்டது. அவன் திக்பிரமை பிடித்தவன் போல் ஆனான். கிடந்த இடத்தை விட்டு எழுந்திருக்கவும் பயமாயிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/76&oldid=854532" இலிருந்து மீள்விக்கப்பட்டது