பக்கம்:மன ஊஞ்சல்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 67 பக்கத்திலே விழுந்து கிடந்த அந்தப் பெண்களோ மூச்சுப் .ே ப. ச் ச ற் று இந்த உலக நினைவே இல்லாதவர்களாக அசைவற்றுக் கிடந்தார்கள். நடராசனுக்கும் பயம் கொண்டு விட்டது. சிறிது சிறிதாக அவன் உள்ளத்திலே பீதி அதிகரித்துக் கொண்டு வந்தது. இந்த நிலையே நீடிக்கு மானால், அவனும் அந்தப் பெண்களின் கதியை அடையக் கூடிய நிலை உருவாகிக் கொண்டிருந்தது. அப்போது மறுகோடியில் ஒரு லாந்தர் விளக்குத் தோன்றியது. அதைக் கண்ட பிறகுதான் நடராசனுக்கு உயிர் வந்தது போல் இருந்தது. விளக்கைக் கண்டால் அல்லது நெருப்பைக் கண்டால் பிசாசு ஒடிவிடும் என்று சொல்வார்களே என்று நினைத்துக்கொண்டு.அவன் மெல்ல எழுந்திருந்தான்.ஆனால் மறு பக்கத்திலிருந்து விளக்கொளி நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்ததே தவிர, புளிய மரத்தின் ஆட்ட ஓசை நிற்க வேயில்லை. காற்றில்லாத நேரத்திலே, அதுவும் மரத்தின் ஒன்றிரண்டு கிளைகள் மட்டுமே அப்படி ஆடுவது என்றால் அது எப்படி முடியும். அது பிசாசாகத் தான் இருக்க வேண் டும். ஆனால் அது நெருப்பைக் கண்டு ஒட்டம் பிடிக்கக் காணோமே! இவ்வாறு நடராசன் மனம் அப்படியும் இப்படி யும் எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்த விளக்கொளிமரத்தையடைந்தது. மரக்கிளைகள் குலுங்கும் ஓசையும் நின்றது. அதைத் தொடர்ந்து பழங்கள் உதிரும் ஓசையும் நின்றது. அதே சமயத்தில் நடராசனின் காதில் இந்தப் பேச்சுக்குரலும் தெளிவாக விழுந்தது. 'முனியா, சீக்கிரம் இறங்கி வா. யாரும் வருவதற்குள் பழங்களையெல்லாம் பொறுக்கிக் கொண்டு போய்விடலாம்," 'இதோ வருகிறேன் காத்தா. சாக்குக் கொண்டு வந்திருக்கிறாயல்லவா?” யாரோ மரத்திலிருந்து சரசர வென்று இறங்கும் ஓசை கேட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/77&oldid=854533" இலிருந்து மீள்விக்கப்பட்டது