பக்கம்:மன ஊஞ்சல்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 மன ஊஞ்சல் நடராசன் புரிந்து கொண்டான். மரத்தைக் குலுக்கியது ஆவியுலகத்து ராக்கப்பனல்ல பூலோகத்து முனியன்தான். காத்தனும் முனியனும் புளியம்பழம் களவாட வந்திருச் கின்றனர் என்ற விஷயம் அவனுக்கு விளங்கி விட்டது. அவ னுக்கு ஒர் எண்ணம் தோன்றியது 'ஆ! களவாடி; களவாடி!' என்று கத்தினான். அவ்வளவுதான். காத்தனும் முனியனும் காற்றாய்ப் பறந்தார்கள். அவர்கள் ஓடிய வேகத்தில் புளியம்பழம் அள்ளக் கொண்டு வந்திருந்த சாக்குப் பைகளையும் லாந்தர் விளக்கையும் விட்டுவிட்டுப் போனார்கள். நடராசனுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த பயமும் தெளிவடைந்தது. சற்றுமுன் கத்துகின்ற போது கூட, எங்கே அந்தத் திருடர்கள் தன்னைத் தாக்குவார்களோ என்ற பயம் இருந்தது. இப்போது அதுவும் பறந்து போய்விட்டது. ஒரு மனிதனுடைய குரலுக்குப் பயந்து ஓடுகின்ற அந்த உருவங்கள் பிசாசாக இருக்க முடியாதென்று அவன் நிச்சயமாக எண்ணினான். லாந்தர் விளக்கை அந்தத் திருடர்கள் விட்டுவிட்டுப் போனது அவனுக்கு இன்னொரு வகையில் நல்லதாகத் தோன்றியது. அந்தப் பெண்கள் இருட்டில் கண் விழித்தால் எதிரில் தெரிகிற உருவமெல்லாம் பிசாசாகவே தோன்றக் கூடும்; அதனால் அவர்கள் பயந்து அலறக்கூடும்; மறுபடி மூர்ச்சித்து விழவும் கூடும். அவன் மெல்ல எழுந்து நடந்து சென்று அந்த லாந்தர் விளக்கை எடுத்துக் கொண்டு வந்தான். அந்தப் பெண்கள் படுத்திருந்த இடத்தின் அருகில் அதை வைத்தான். அதன் பிறகு என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. - அவர்கள் மூர்ச்சை தெளியும் வரை அங்கேயே இருப்பதா அல்லது போய் யாரையாவது கூட்டிக்கொண்டு வந்து அந்தப் பெண்களைத் துரக்கிக் கொண்டு போய் அவரவர்கள் வீட்டில் சேர்ப்பதா என்று அவன் யோசித்தான். பிறர் உதவியை எதிர் பார்ப்பதையோ அல்லது அங்கு காத்துக் கொண்டிருப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/78&oldid=854534" இலிருந்து மீள்விக்கப்பட்டது