பக்கம்:மன ஊஞ்சல்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 69 பதையோ விடத் தானே ஏன் அந்தப் பெண்களை ஒவ்வொரு வராகத் துரக்கிச் சென்று அவரவர்கள் வீட்டில் விட்டு வரக் கூடாது 3. என்று அவனுக்கு இன்னோர் எண்ணம் உண்டாகியது. அதுதான் சரியென்று அவன் முடிவுக்கு வந்தான். தங்கம் தைரியசாலி என்பது அவன் எண்ணம். ஆகவே முதலில் ராதாவைத் தூக்கிக் கொண்டுபோய் அவள் வீட்டில் விட்டுவிடுவதென்றும், தான் திரும்பும் வரையில் தன்னத் தனியாகக் கிடக்கும் தங்கம் லிழித்துக் கொண்டாலும் ராதா அளவு பயப்பட்டுவிட மாட்டாள் என்றும் அவன் எண்ணி னான். தங்கம் விழித்துக் கொண்டால் பயப்படாமல் இருப்ப தற்காக லாந்தரை அங்கேயே விட்டுவிட்டு ராதாவைத் தோளில் சாய்த்துப் போட்டுக் கொண்டு மெல்ல! மெல்ல நடந்து சென்றான். போகும் வழியிலேயே ராதா கண்விழித்துப் பார்த்தாள். கண்விழித்த உடனே அவளுக்குத் தெரிந்தது சுற்றிச் சூழ்ந் திருந்த பயங்கரமான இருள்தான். சற்று உணர்வு வந்த பிறகு தான், தான் தூக்கிச் செல்லப்படுவதை உணர்ந்தாள். புளிய மரத்து ராக்கப்பன்தான் த ன் ைன த் தூக்கிச் செல்கிறானோ என்று அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. அந்த எண்ணம் உதித்த உடனே அவள் இதயத்திலே ஒரு படபடப்பு-அவள் அங்கங்களிலே ஒரு நடுநடுக்கம் உண்டா கியது. அவளைத் தோளில் சாய்த்துத் தூக்கிக்கொண்டு போன நடராசனுக்கு அந்தப் படபடப்பும் நடுநடுக்கமும் நன்றாகத் தெரிந்தன. அவள் இதயம் படபடவென்று அடிப்பது அவன் தோளில் விட்டுவிட்டு மென்மையாக இடிப்பதுபோல் இருந்தது. அவளுடல் உறுப்புக்கள் நடுங்கிய போது ஏற்பட்ட அசைவுகள் அவன் உடலைத் தாக்காமல் விட்டுவிடவில்லை. ஆகவே, அவள் விழித்துக் கொண்டு விட்டாள் என்பதை யறிந்த அவன் ராதா, பயப்படாதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/79&oldid=854535" இலிருந்து மீள்விக்கப்பட்டது