பக்கம்:மன ஊஞ்சல்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை அச்சாகும் போதே படித்த இருவரின் கருத்துரைகள் படிப்பது பெருமை பெறுவது இன்பம்! மனத்தின் ஆழத்தைக் கிளறி, அதில் உள்ள காதலை வெளிப்படுத்தி இலக்கிய வடிவத்தில் வாசகர்களுக்கு நல்ல கருத்தோவியமாகப் படைத்திருக்கிறார் நாவலாசிரியர். ஏழைக் கந்தசாமி வாத்தியாருக்கு அறிவு, குணம், அழகு எல்லாம் பொருந்திய தங்கம். நொண்டிக் கையும் அரைப் பைத்தியமான பாங்கும் கொண்ட நடராசன். - மாமன் மகனாக வந்த சுந்தரேசன். அவன் நல்லவன் என்று நினைத்து அவனையே திருமணம் செய்து கொள்ள எண்ணும் தங்கம். அண்ணாமலைப் பண்டிதருக்கும் சுந்தரேசனுக்கும் மர்ம புதிராக உள்ள உறவு. - அண்ணாமலைப் பண்டிதர் பணத்தைக் கொடுத்துத் தன்னை விலைக்கு வாங்கி விட்டதாக எண்ணும் தங்கம். இந்தக் கதாபாத்திரங்களைக் கொண்டு, அன்பு, காதல் ஆகியவற்றின் மேன்மையை இலக்கிய நயத்தோடு ஆசிரியர் விளக்குகிறார். இலக்கியத்தின் உச்சகட்டமாக விளங்கும் இந்த நாவலைப் படிப்பது பெருமை; பெறுவது இன்பம், இன்பம்! P.ரெங்கேஸ்வரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/8&oldid=854536" இலிருந்து மீள்விக்கப்பட்டது