பக்கம்:மன ஊஞ்சல்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 மன ஊஞ்சல் ராக்கப்பனை விரட்டியடித்து விட்டேன்' என்றான் "உண்மையாகவா?’ என்று கேட்டுக்கொண்டே அவள் கீழே குதித்தாள். ஆனால், அவள் பயம் முற்றிலும் போய்விட வில்லையாகவே அவன் கையை இறுகப் பிடித்தவாறு அவனை ஒட்டிக் கொண்டே நடந்து சென்றாள். அவர்கள் அப்படி நடந்து போய்க் கொண்டிருந்தபோது, திடீரென்று ராதா நடராசனைக் கட்டித் தழுவிக் கொண்டாள். அவள் உடலெல்லாம் வெடவெடவென்று நடுங்கியது. குப்பென்று வியர்த்துப் போய்விட்டது. அதோ பார்த்தீர்களா?” என்று கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போலப் பேசினாள். அவள் குறிப்பிட்டுக் காட்டிய பக்கம் உற்றுப் பார்த்த நடராசனுக்கு ஒன்றும் புலப்படவில்லை. 'என்ன? ஒன்றும் தெரியவில்லையே!' என்று கேட்டான். அதோ நேரே பாருங் கள். ஏதோ நிழலாடுவது போல் அசைகிறது!" என்று சுட்டிக் காட்டினாள் ராதா, ஆனால், நடராசன் பார்த்த போது எதுவுமே தெரியவில்லை. 'ஒன்றும் தெரியவில்லையே!' என்று மறுபடியும் கூறினான் 'ஆம்! இப்போது அதைக் காணோம்', என்றாள் ராதா. 'சும்மா வா! நீ மிகவும் குழம்பிப்போய் இருக்கிறாய், காணுகின்ற நிழல் எல்லாம் உனக்குப் பேயாகப் தோன்றுகிறது. பேசாமல் கண்ணை மூடிக் கொண்டு என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்து வா!' என்றான் நடராசன். ராதாவின் வீட்டிற்கு அவர்கள் தங்கத்தின் வீட்டைக் கடந்துதான் போகவேண்டும். தங்கத்தின் வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் வீட்டு வாசலிலும் மின்சார விளக்குப் போடப்பட்டிருந்தது. அந்த வெளிச்சத் தில் வந்தவுடன் ராதா, நடராசனை விட்டுச் சிறிது விலகிக் கொண்டாள். அவ்வளவு நேரமும் இல்லாத வெட்க உணர்ச்சி அவளுக்கு அப்போது வந்துவிட்டது! அவ்வளவு நேரமும் இருந்த அதிதீவிரமான அச்சஉணர்ச்சி அந்த வெட்க உணர்ச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/80&oldid=854537" இலிருந்து மீள்விக்கப்பட்டது