பக்கம்:மன ஊஞ்சல்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 71 சியை அடக்கி வைத்திருந்தது. ஆனால், அந்த அச்சம் குறைந்தவுடன். வெட்கம் திரும்பவும் தன்னுடைய இடத்தைப் பிடித்துக் கொண்டுவிட்டது. அப்போதுதான் ராதாவுக்குத் தங்கத்தின் நினைவு வந்தது. ‘தங்கம் எங்கே?' என்று கேட்டாள். 'அந்த இடத்திலேயே தான் கி ட க் கி றா ள் என்று பதில் சொன்னான் நடராசன். "ஐயையோ தனியாகவா கிடக்கிறாள்? பயமாக இருக்குமே! நான் அவர்கள் வீட்டில் போய்ச் சொல்வி விட்டு வருகிறேன்' என்று தங்கத்தின் வீட்டுப் பக்கமாய்ப் பாய்ந் தாள் ராதா, நடராசன் எட்டிச் சென்று தங்கத்தின் வீட்டை நோக்கிச் சென்ற ராதாவின் கையைப் பிடித்து நிறுத்தினான்: ‘'வேண் டாம், ராதா வேண்டாம். அவர்கள் பதறிப் போய்விடுவார் கள். உன்னை வீட்டில் கொண்டு போய் விட்டுவிட்டு நான் போய் அவளை மூர்ச்சை தெளிவித்து அழைத்துக் கொண்டு போகிறேன்' என்றான் நடராசன். "அப்படியானால், வாருங்கள். இப்போதே திரும்பிப் போய், அவளை அழைத்துக்கொண்டுவந்து விடுவோம்' என்றாள் ராதா. 'உன்னையும் கூட்டிக் கொண்டா? போதும்! போதும்! இருண்ட தெல்லாம் உன் கண்ணுக்குப் பேயாகத் தெரிகிறதே உன்னையும்கூட அழைத்துச் சென்றால், சரிதான். மறுபடியும் மயக்கம் போட்டு விழுந்து விடுவாய். உன்னை வீட்டிலே கொண்டு போய் விட்டுவிடுகிறேன். நீ பேசாமல் இரு. நான் போய்த் தங்கத்தை அழைத்து வருகிறேன்' என்றான் நடராசன். அதன்பின் ராதா எதுவும் பேசவில்லை. இவரும் ராதா வின் வீட்டு வாசலை அடைந்ததும் ராதா கதவைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/81&oldid=854538" இலிருந்து மீள்விக்கப்பட்டது