பக்கம்:மன ஊஞ்சல்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 மன ஊஞ்சல் தட்டினாள். கதவு திறக்கப்பட்டவுடன், நடராசன் திரும்பி விட்டான், ராதா உள்ளே போனாள். நடராசன் வெகு வேகமாகத் திரும்பி நடந்து அதே சந்துக்குவந்து சேர்ந்தான். அந்தச் சந்தில் அவன் வைத்து விட்டுப் போன லாந்தரைக் காணவில்லை. காற்றிலோ அல்லது எண்ணெய் குறைந்தோ அது நின்று போயிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு அவன் அவளை விட்டு விட்டு வந்த இடத்தை நோக்கி நடந்தான். போகும் வழியில் புளியம் பழங்களின் மீது அவன் கால் பட்டு அவற்றின் ஒடுகள் நொறுங்கின. அவன் காலில் பழங்கள் ஒட்டிக் கொண்டு பிசுபிசுத்தன. அதையெல்லாம். பொருட்படுத்தாமல் அவன் வேகவேகமாக நடந்தான். தங்கத்திற்கு என்ன ஆபிற்றோ என்று அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது. தங்கத்தையும் காணவில்லை, தங்கம் கிடந்த இடத்தின் அருகில் இருந்த லாந்தர் விளக்கையும் காணவில்லை. நடராசனின் இதயம் பக்கென்று நின்று போனது போலிருந்தது. 'தங்கம், தங்கம்!” என்று இரண்டு முறை மெல்ல அழைத்துப் பார்த்தான். பதிலில்லை. மறுபடியும் உரத்த குரலில். 'தங்கம் தங்கம்!' என்று கூவினான். அதற்கும் பதிவில்லை. அந்தச் சந்து முழுவதும் அவன் குறுக்கும் நெடுக்குமாக நடந்து நடந்து எந்த இடத்திலாவது தங்கம் கிடக்கிறாளா என்று தேடிப் பார்த்தான். ஆனால் அவள் எந்த இடத்திலும் காணப்படவே யில்லை. திரும்பவும் அவன் ராதா வீட்டுக்கு ஓடினான். கதவைப் படபடவென்று தட்டினான். அப்போதுதான், நடந்த நிகழ்ச்சிகளைத் தன் தாய்க்கு விளக்கிச் சொல்லிவிட்டுச் சாப்பிட உட்கார்ந்த ராதா ஒடி வந்து கதவைத் திறந்தாள் அவள் தாயும் அவள் பின்னாலேயே வந்தாள். “ராதா! தங்கத்தை அங்கே காணோம்!” என்று டராசன் சொன்னவுடன் 'ஆ' வென்று கதறிவிட்டாள் ராதா,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/82&oldid=854539" இலிருந்து மீள்விக்கப்பட்டது