பக்கம்:மன ஊஞ்சல்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

LO®ዥ ஊஞ்சல் 10. கனவா? நனவா? மெய்யா? பொய்யா? தங்கம் கண் விழித்தபோது அவள் முன்னே ஒரு முகம் தோன்றியது. அந்த முகத்தைக் கண்டவுடன் பூச்சாண்டி யைக் கண்ட குழந்தை போலத் தங்கம் அலறிவிட்டாள். அடுத்த வினாடியே அவள் மறுபடியும் மூர்ச்சையடைந்து விட்டாள். உண்மையில் அந்த முகம் பயங்கரமானதாகத்தான் இருந்தது. பரட்டைத் தலையும், சுருக்கம் நிறைந்த நெற்றியும், கோடிய புருவமும், குழி விழுந்த கண்களும், கோணிய வாயும்.அமுங்கிய மூக்கும்,ஒட்டிய கன்னமும் ஆகத் தோன்றிய அந்த முகத்திலே விளங்கித் தோன்றிய ஒரு விதமான கடுகடுப்பும் கொடுமையும் குரூரமும் காணக்கான அது பயங்கரத்தையே அதிகமாக்கியது. எத்தனை துன்பங்கள் அடுக்கடுக்காய் வந்தாலும் கவலையோ வருத்தமோ எரிச்சலோ கோபமோ அடையாத கந்தசாமி வாத்தியாரைத் தந்தையாகப் பெற்ற தங்கத்திற்கு- என்றும் இன்முகமே காட்டி, எவருடனும் அன்பாகவே பேசும் மரகத அம்மாளைத் தாயாகப் பெற்ற தங்கத்திற்கு-தந்தையோ டொத்த அன்புள்ளம் பூண்ட முருகேச வாத்தியாரையும் தன்னிடம் கடுகடுப்பாகப் பேசினாலும் எப்போதும் மற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/83&oldid=854540" இலிருந்து மீள்விக்கப்பட்டது