பக்கம்:மன ஊஞ்சல்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 75 'இல்லை” என்று சொன்னாள் தங்கம். உண்மையில் அவளுக்கு அப்போது ஏதாவது சாப்பிட்டால் நல்லதென்று தான் தோன்றியது. ஆனால் அந்தக் கிழவியிடமிருந்து எதுவும் வாங்கித் தின்ன அவளுக்கு மனம் வரவில்லை. தங்கம் கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்து உட்கார்ந் தாள். தான் ஒர் ஒலைக் குடிசையில், பீத்தல் பாய் ஒன்றின் மீது படுத்துக் கொண்டிருக்கிற உண்மை நிலையை அவள் அப்போதுதான் உணர்ந்தாள். அவளுக்கு முந்திய நினைவு அப்போதுதான் வந்தது. ராதாவுடன் கோயிலுக்குப் போனதும் வழியில் நடராசனைச் சந்தித்ததும் புளிய மரத்தில் பேயாடியதும் அவளுக்கு நினைவு வந்தன. அதற்குப் பின் என்ன நடந்தது என்பதே அவளுக்குத் தெரியவில்லை. தான் எப்படி இந்தக் குடிசைக்கு வந்து சேர்ந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க முடியாமலிருந்தது. தன்னை அறியாமல் எப்படி இங்கு வந்தோம் என்பது அவளுக்கு வியப் பாயிருந்தது. ஒரு வேளை அந்தப் புளியமரத்துப் பிசாசு தன்னைத் துரக்கி வந்துவிட்டதோ என்று எண்ணினாள். கேள்விக் குறிப்போடு அவள் பக்கத்திலிருந்த கிழவியை நோக்கினாள். அவளை உற்றுப் பார்க்கப் பார்க்க அவளைப் பற்றித் தங்கத் திற்கு நல்ல எண்ணமே உருவாகவில்லை. கட்டுக்கதைகளில் வரும் சூனியக்காரிகளின் உருவத்திற்கு அப்படியே எடுத்துக் காட்டாக விளங்கினாள் அந்தக் கூனற்கிழவி. அவள்தான் தன்னை எதற்காகவோ இங்கு கொண்டு வந்து வைத்திருக் கிறாள் என்று எண்ணினாள் தங்கம். அவள் மனம் பெருங் குழப்பமடைந்தது. அவன் திரும்பத் திரும்ப தான் அங்கு எப்படி வந்திருக்கக் கூடும் என்பதையே நினைத்துப் பார்த்தாள். ராதாவும் தானும் நடராசனுடன் அந்தச் சந்தில் வந்துகொண்டிருந்ததும், புளிய மரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/85&oldid=854542" இலிருந்து மீள்விக்கப்பட்டது