பக்கம்:மன ஊஞ்சல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மன ஊஞ்சல் பேயாடும் ஓசை கேட்டுப் பயந்து இருவரும் நடராசனைக் கட்டிப் பிடித்துக் கொண்டதும், அவளுக்கு நன்றாக நினைவில் இருந்தது. ராதாவும் நடராசனும் தன்னை இந்தக் கிழவியிடம் ஒப்படைத் திருக்கக் கூடும் என்று எதிர் பார்க்க நியாயமில்லை. ஒரு வேளை அவர்களையும் இந்தச் சூனியக் காரி கொண்டுவந்து வேறு எங்காவது வைத்திருப்பாளோ என்று தோன்றியது.

  • ராதா எங்கே!' என்று அவள் கேட்டாள். அதற்கும் அந்தக் கூனற் கிழவி வெற்றிலை குதப்பிக் கொண்டிருந்த வாயில் புன்சிரிப்பைத்தான் தேக்கினாள். "கொஞ்சம் காப்பி மட்டும் சாப்பிடம்மா!' என்றாள் கிழவி,

‘'வேண்டாம்' என்றாள் தங்கம். அத்துடன் அவர்கள் பேச்சு நின்றது. தங்கத்தின் குழப்ப மான நெஞ்சம் தான் சிக்கிக் கொண்டிருந்த இந்தக் குழப்ப நிலையைக் கண்டுபிடிக்கச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. கிழவி, வெற்றிலையைக் குதப்பிக்கொண்டே உட்கார்ந்திருந் தாள். பொழுது மெல்லமெல்லக் கடந்து கொண்டிருந்தது. இதேநிலையில் அந்தக் குடிசையில் சூழ்ந்திருந்த பயங்கரம் செறிந்த அமைதியான போக்கில் மத்தியானம் ஆகிவிட்டது. தங்கத்துக்குப் பசி வயிற்றைக் கிள்ளியெடுத்தது. ஆனால் அந்தக் கிழவியிடம் எதுவும் கேட்டு வாங்கிச் சாப்பிட விரும்பவில்லை. பசிமயக்கத்தில் அவள் கண்களை மூடிக் கொண்டு சுவர்மீது சாய்ந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று ஒரு கடுமையான பேச்சுக்குரல் காதில் விழுந்தது. அவள் கண் திறந்து பார்த்தாள். அந்தப் பயங்கரமான முகம். அவள் மு. த லி ல் நினைவற்றிருந்த நிலையில் கண்ணில் பட்ட அதே கொடுர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/86&oldid=854543" இலிருந்து மீள்விக்கப்பட்டது