பக்கம்:மன ஊஞ்சல்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன ஊஞ்சல் 77 மான முகம் அவள் கண்ணெதிரே தோன்றியது. ஆனால் அவள் இப்போது மயக்கமடைந்து விடவில்லை என்றாலும் பயந்து கூச்சல்போட வாய் திறந்தாள். ஆ ை ல் , அவளுடைய பயத்தில் சத்தம் தொண்டையோடு அமுங்கி விட்டது. வெளிப்படவேயில்லை, அந்தப் பயத்திற் கிடையிலும் அவனை-அந்தப் பயங்கரமுகத்தை, தான் முன்னெரு முறை பார்த்திருப்பது அவள் நினைவுக்கு வந்தது. முதலில் அவனைப் பார்த்த போது ஒரு விதமான மயக்க நிலையில் தான் இருந்ததும் அவளுக்குத் தெரிந்தது. சந்தேக மில்லாமல் தான் ஒரு சூனியக்காரியிடம் அகப்பட்டுக் கொண்டுவிட்டதாகவே அவள் நம்பினாள். அவர்களிட மிருந்து, அந்தக் கூல்ை கிழவியிடமிருந்தும் எதிரில் நிற்கும் அந்தப் பயங்கர மனிதனிடமிருந்தும், எவ்வாறேனும் தப்பி யோடிவிட வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது. ஆனால் எப்படித் தப்புவது? சுனற்கிழவியோ தன் அருகி லேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அந்தப் பயங்கர மனிதனோ எதிரில் வாசல் பாதையில் நின்றுகொண்டிருக் கிறான். கூனற்கிழவியைக் கடந்து போனாலும் அவனிட மிருந்து தப்பிக்க முடியாது. அவனிடமிருந்து தப்பித்தாலும் கிழவி தன் மந்திர சூனிய சக்தியினால் தன்னை ஏதாவது செய்துவிடக்கூடும். இப்படி அவளுடைய எண்ணமெல்லாம் ஒடிக்கொண்டிருந்த போது அந்தப் பயங்கர மனிதன் வாய் திறந்து பேச ஆரம்பித்தான். "தங்கம் மயக்கம் தெளிந்துவிட்டதா? பாவம்! நான் வராவிட்டால் இந்தப் பணியில், தெருப்புழுதியில் நீ புரண்டு கொண்டிருக்க வேண்டும். நல்ல வேளை! நான் அங்கேவந்து சேர்ந்தேன். பொன் போன்ற உன் உடல் புழுதியில் கிடக் கலாமா என்று இங்கே தூக்கிவந்தேன். பாட்டி, தங்கம் எதுவும் சாப்பிட்டாளா? என்று கேட்டான் அந்தப் பயங் கரத் தோற்றமுடைய மனிதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மன_ஊஞ்சல்.pdf/87&oldid=854544" இலிருந்து மீள்விக்கப்பட்டது